🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 9

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 9

அன்புச் சொந்தங்களே வணக்கம்! சென்ற வாரம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தொடரை தொடர முடியாமல் போய்விட்டது என்பதை மிகுந்த வருத்தத்தடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பகுதியில் நாம் காண இருப்பது, பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படி உருவாகி வந்த இந்த பிரபஞ்சம் பல்வேறு நிலைகளை கடந்து இன்று நாம் காணும் நிலையை அடைந்து உள்ளது. இதிலே நாம் மிகவும் கவனிக்க வேண்டியது தட்பவெப்ப நிலைகள். இந்த பூமி பந்தானது எல்லா கண்டங்களையும் உள்ளடக்கிய ஒரே உலகமாக இருந்தது. ஆனால் இவைகள் இயற்கை மாற்றங்களினால் வெவ்வேறு  காலகட்டத்தில் வெவ்வேறு கண்டங்களாக பிரிந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. அதாவது ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம், ஐரோப்பா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம் மற்றும் அமெரிக்கா கண்டம் என அறியப்படுகிறது. இதிலே ஆசியா கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழகம் , கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் கொஞ்ச பகுதிகள் மட்டுமே ஒரே சீரான சீதோஷ்ண நிலையில் ஆண்டு முழுவதும் பெற்று உள்ளனஇது ஏன் என நாம் சிந்திக்க வேண்டும்?

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையை பெற்றிருக்கவில்லை.

ஒன்று அதிக குளிர், அல்லது அதிக வெப்பம் உடைய நாடுகளாகவே உள்ளன. நமது நாட்டிலும் கூட வட மாநிலங்களில் ஆறுமாதங்கள் அதிக குளிராக இருக்கும், மீதமுள்ள ஆறு மாதங்கள் கடும் வெப்ப காலமாக இருப்பதையும் நாம் அறிவோம். ஆனால் தென் தமிழகத்தில் மட்டுமே மிதமான மழை, மிதமான வெப்பம், மிதமான குளிர் மற்றும் மிதமான சீதோஷ்ண நிலை வருடம் முழுவதும் இருப்பது ஆச்சிரியமே! இதற்கு என்ன காரணம் என்பதை திருவாசகத்தில் இந்த உலகை படைத்த ஆதி சிவன் தோன்றியது தென் தமிழகமே! எனக் கூறி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என நமக்கெல்லாம் மெய்ஞானம் மூலம் அறிவுறுத்துகிறார் மாணிக்கவாசகர். நன்றி மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் சிந்திப்போம்!

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ.நாகராஜன்.,
இயற்பியல் பேராசிரியர்,
பூ. ச. கோ, கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved