🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொடிய நெஞ்சம் கொண்டோரால் அப்பட்டமாக பறிக்கப்பட்ட நீதி!

சுதந்திரம் பெற்றதிலிருந்து இடஒதுக்கீடு விவகாரம் பல சட்டப்போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் அந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்ந்ததாக இருந்தால் நீதிமன்றங்கள் உடனடியாக தடை உத்தரவோ அல்லது செல்லாது என்றோ அறிவித்துவிடும். சமீபத்தில் வன்னியர் இடஒதுக்கீடு, மராத்தா இடஒதுக்கீடு, கர்நாடகா முஸ்லிம் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல இடஒதுக்கீடு வழக்குகளில் நீதிமன்றங்கள் போதிய தரவுகள் இல்லை, 50% வரம்பை மீறிவிட்டது என்ற காரணங்கள் தொடர்ந்து சொல்லப்படும். 

ஆனால் தமிழகத்தில் இருந்த இடஒதுக்கீடுக்கு எதிராக முன்னேறிய வகுப்பைச் சார்ந்த செண்பகம் துரைராஜ் என்பவர், பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்காமலே, இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் தனக்கு பொறியியல் படிப்பில் சேர இடம்கிடைக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரரின் உண்மைத்தன்மையைக்கூட ஆராயமல் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.

அதேபோல் தற்பொழுது முன்னேறிய வகுப்பினரில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டிலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை இடஒதுக்கீடு வழக்கில் கூறிவந்த காரணங்களையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, தங்களுக்கு தங்களே இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டை ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு முன்வைக்கிறது.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எஸ்.ஆர்.சின்ஹோ கமிட்டியின் பரிந்துரைப்படியும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு சொன்ன வாதத்தை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சின்ஹோ ஆணையம் இடஒதுக்கீடு குறித்து எந்தவித பரிந்துரையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீடு பிரிவில் வராதவர்கள் குறித்த சமூக, பொருளாதார நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட அக்குழு, பரிந்துரை வழங்காதநிலையில், வழங்கியுள்ளதாக கூறுவது மிகப்பெரிய மோசடி.

தவிர, சின்ஹோ ஆணையம் 2008-இல் அக்டோபர் 18 முதல் 21 வரை தமிழகத்தில் நடத்தியது. அப்போது சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் அன்றைய மக்கள் தொகை 6.29கோடி. அதில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 33.90 லட்சம் மட்டுமே. அதாவது மொத்த மக்கள் தொகையில் 5.46% மட்டுமே. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 50% என வைத்துக்கொண்டாலும் 2.23% மட்டுமே வருகிறது. வெறும் 2.23% மக்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது உச்சபட்ச அநியாயம். 

மண்டல் கமிஷன் அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை குறைந்தபட்சம் 52% என்று பல தரவுகளை வைத்து கணக்கிட்டு, ஏற்கனவே இடஒதுக்கீடு வரம்பு 50% என்று இருப்பதால், எஸ்சி/எஸ்டி-க்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு அளவை கழித்துக்கொண்டு மிகக்குறைந்தபட்சமாக 27% வழங்க பரிந்துரை செய்த நிலையில், 2.23% மக்களுக்கு 10% என்பது நீதியின் பெயரால் பிற்படுத்தப்பட்டோர் மீது உச்சநீதிமன்றம் நடத்திய கொடூர தாக்குதல்.

இந்த இடஒதுக்கீடுக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களில் சிலர் செய்திகளை பரப்புவது அறியாமையின் உச்சம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. 1990-இல் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடைதுக்கீடு வழங்கியபோது, தமிழகம் தவிர்த்த நாடுமுழுவதும் மாணவர்களை தூண்டிவிட்டு நாட்டை வன்முறைக்காடாக்கியவர்கள் முன்னேறிய சாதியினர். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுக்கு எதிராக 21 மாணவர்களை தீவைத்து எரித்த வரலாறுகளையெல்லாம் மறந்தும், தெரிந்துகொள்ளாமலும், ஆதரவு செய்திகளை பரப்புவது சொந்த மக்களுக்கு செய்யும் துரோகம். சுயநலன் தவிர வேறில்லை.

தமிழகத்தில் முன்னேறிய சாதிகளாக 79 சாதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பலவற்றின் உட்பிரிவுகள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் வருவதை காணலாம். உதாரணமாக வெறும் வீரசைவர் என்றாலோ, நாயுடு என்றாலோ தான் முற்பட்ட பிரிவு. ஆனால் இந்த சாதிகள் உட்பிரிவுகளாக ஜங்கம், பண்டாரம், யோகீஸ்வரர், கவரை, கவரா, வடுகர் அனைத்தும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்பட்ட வகுப்பில் தமிழகத்தில் 79 சாதிகள் வருவதாக கூறப்படுவதின் உண்மைநிலை என்ன? 

(FC-அடைப்புக் குறிக்குள் முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள்  வரிசை எண்)

(OBC-அடைப்புக்குறிக்குள் உள்ளது, மாநில பிசி பட்டியல் வரிசை எண்; மத்திய ஓபிசி வரிசை எண்) 

FC பிரிவில் வரும் கிருஸ்தவர்கள்:

1.ஆங்கிலோ இந்தியர் (511)

2.ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)

3.லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)

4.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)

5.ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)

6.முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)

7.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)

OBC பிரிவில் வரும் கிருஸ்தவர்கள்:

1. கல்விக்காகவும், அரசு வேலைக்காகவும் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து கிருஸ்தவ மதம் மாறியவர்கள் (18;22)

2.S.I.U.C இல் இருந்து C.S.I பிரிவுக்கு மாறிய கிருஸ்தவர்கள் (19;23)

3.லத்தின் கத்தோலிக் (கன்னியாகுமரி, செங்கோட்டை) (71;87)

4.கிருஷ்தவ நாடார்,சாணார்,கிராமனி அனைவரும் (82;104)

5.BC/MBC/DNT பிரிவுகளில் இருந்து கிருஸ்தவ மதம் மாறியவர்கள் (142;172)

6.பரவர் (170;117)

FC பிரிவில் வரும் முஸ்லிம்கள்:

8.தாவூத் (608)

9.கட்ஸு (சைத்)(609)

10.மீர் (610)

11.மைமன் (சைத்) (611)

12.நவாப் (612)

13.அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)

14.பத்தான் (பட்டானி), கான் (747)

OBC பிரிவில் வரும் முஸ்லிம்கள்:

1.அன்சர் (5)

2.தெக்கானி முஸ்லிம்  (21;26)

3.துதிகுலா (24;32)

4.லெப்பை, ராவுத்தர்,மரக்காயர் (69:85)

5.ஷேக் (114)

6.சையத் (119)

FC பிரிவில் வரும் செட்டியார்கள்:

15.செட்டியார் (701)

16.ஆரியர் (705)

17.அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)

18.ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)

19.பேரி செட்டியார் (711)

20.சோழபுரம் செட்டியார் (714)

21.காயல் செட்டி (725)

22.கொங்குச் செட்டியார் (728)

23.கோட்டைப்புரச் செட்டியார் (733)

24.கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)

25.குக வாணியர் (735)

26.மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)

27.நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)

28.சைவச் செட்டியார் (751)

29.திருவெள்ளறைச் செட்டியார் (75)

30.உலகமாபுரம் செட்டியார் (761)

OBC பிரிவில் வரும் செட்டியார்கள்; 

1.அகரன் வெள்ளாள செட்டியார் (2;1), 

2.செட்டி (உட்பிரிவுகள் கொட்டார் செட்டி, ஏழூர் செட்டி, பாதிர செட்டி, வளையல் செட்டி, புதுக்கோட்டை செட்டி(16;20)) 

3.தேவாங்கர், சேடர் (22;27) 

4.பன்னிரெண்டாம் செட்டியார், உத்தம செட்டியார் (97;116), 

5.சாது செட்டி ( உட்பிரிவுகள் தெலுங்கு செட்டி, 24மனை தெலுங்கு செட்டி (108;125)), 

6.சாலியர்( உட்பிரிவு பத்மசாலி,பட்டு சாலி, பட்டரையர்,அதைவர் (111,131)), 

7.வாணிய செட்டியார் (131;155), 

8.வெள்ளன் செட்டியார் (135;162), 

9.வயநாடு செட்டியார் (138;167), 

10.கொங்கு செட்டி (MBC-156;72), (கோவை&ஈரோடு மட்டும்)

11.குருகினி செட்டியார் (161;83), 

12.மௌந்ததன் செட்டி (164;100)

13.சோழிய செட்டி (176;137), 

14.தெலுகுபட்டி செட்டி (176;125)

FC-பிரிவில் வரும் வெள்ளாளர்கள்:

31.அச்சு வெள்ளாளர் (702)

32.ஆற்காட்டு வெள்ளாளர் (707)

33.அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)

34.கொந்தல வெள்ளாளர் (731)

35.நாங்குடி வெள்ளாளர் (742) (தவறாக உள்ளது)

36.சைவ வெள்ளாளர் (755)

37.கார்காத்தார் (கார்காத்த வெள்ளாளர்,காரைக்காட்டு வெள்ளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)

38.மொட்டை வெள்ளாளர் (738)

39.வெள்ளாளப் பிள்ளைமார் (763)

40.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)

41.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)

OBC பிரிவில் வரும் வெள்ளாளர்கள்:

1. அகமுடையர்( தொழு அல்லது துளுவ வெள்ளாளர் (1;1)),

2. அர்ச்சகரை வெள்ளாளர் (7;6), 

3. இல்லத்து பிள்ளைமார், இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார் (35;45)

4.கொங்கு வெள்ளாளர் -15 உட்பிரிவுகள் (61;73), 

5.நாங்குடி வெள்ளாளர் (85;177)

6.சோழிய வெள்ளாளர்(உட்பிரிவுகள் சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்காரர், கீரைக்காரர்) (116;138))

7.இசை வெள்ளாளர் (152;47)

FC-பிரிவில் வரும் வீரசைவ பிரிவுகள்:

42.ஆதி சைவர் (703)

43.வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)

44.கொட்டைக்கட்டி வீர சைவம் (732)

45.சைவ ஓதுவார் (752)

46.சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)

47.சைவ சிவாச்சாரியார் (754)

OBC-பிரிவில் வரும் வீரசைவ பிரிவுகள்:

1.ஜோகி (37;51)

2.லிங்காயத் -ஜங்கமா (72;8

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved