🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 12

வகுப்புவாரி இடஒதுக்கீடு குறித்தும் பல தவறான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. எனவே இது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். தமிழகத்தில் விடுதலைக்கு முன் வழங்கப்பட்டது வகுப்புவாரி இட ஒதுக்கீடு அல்ல. அது சாதி/மதம்/இனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட கம்யூனல்/சமூக இடஒதுக்கீடு. மேலே உள்ள வரலாற்றுப் பகுதியைப் பார்த்தால் இந்த வேறுபாடு உங்களுக்குப் புரியும். பிராமணர், பிராமணர், அல்லாதோர், முகமதியர், கிறிஸ்துவர், ஆங்கிலோ இந்தியர் என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் விகிதாச்சார இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று பலர் கூறக்கேட்டிருப்போம். ஆனால் 1950 வரை இருந்த அந்த இட ஒதுக்கீட்டு பகீர்மானத்தைப் பார்த்தால் தெரியும் அப்போது அப்படி வழங்கப்படவில்லை என்று உங்களின் உடனடி புரிதலுக்காக மீண்டும் கீழே கொடுக்கின்றோம்.

 

வகுப்புகள்

இடங்கள்

%

மக்கள் %

1

 

2

 

 

3

 

4

 

5

 

 

6

பார்ப்பனரல்லாத இந்துக்கள்

 

பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்கள்

 

பார்ப்பனர்கள்

 

ஹரிஜனர்கள்

 

ஆங்கிலோ இந்தியர்கள் – இந்திய கிருத்துவர்கள்

 

முகமதியர்

 

மொத்தம்

 

 

6

 

2

 

 

2

 

2

 

1

 

 

1

 

14

42.86

 

14.29

 

 

14.29

 

 14.29

 

7.14

 


 7.14

 

100

22

 

50

 

 

3

 

 14

 

4

 

 

7

 

100

 

இதன்படி 3% இருந்த பிராமணர்களுக்கு 14.29% இட ஒதுக்கீடும் 50% மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் அதே 14.29% இடஒதுக்கீடும் வழங்கியது எப்படி விகிதாச்சார இடஒதுக்கீடு ஆகும்?. எப்படி இதை சமூகநீதி என்று ஏற்றுக்கொள்வது?. அதுமட்டுமல்ல 22% மக்கள்தொகை கொண்ட பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு 42.86% இடஒதுக்கீடு வழங்கியது சமூகநீதியையே கேலிக்கூத்தாக்கும் செயல். எனவே அப்போது வழங்கப்பட்டது விகிதாச்சார இட ஒதுக்கீடு அல்ல.

நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் விரைவு அரசமைப்புச் சட்டம் எல்லா வகுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன் மொழிந்தது. ஆனால் இறுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க சரத்து 16-4 -ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படிதான் செண்பகம் துரைராஜன் மற்றும் வெங்கட்ராமன் வழக்குகளில் உச்சநீதிமன்றம் தமிழக கமியூனல் இடஒதுக்கீட்டுமுறையை இரத்து செய்து, இது வகுப்புவாரி இடஒதுக்கீடு முறைக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. 1951 முதல் பிற்படுத்தப்பட்டோர், அட்டவணைச் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைக்கு வந்தது.



வகுப்பு என்றால் என்ன? சாதி என்றால் என்ன? என்பதை புரிந்துக்கொண்டால்தான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு குறித்து நாம் கொள்ளமுடியும். சாதி என்பது இந்தியாவில் உள்ள எல்லா சமூகங்களையும் மேலும் கீழுமாக பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்கு அடுக்கு வர்ணாசிரமங்களையும் அதற்குள் வராத வெளியில் இருக்கும் ஒரு பிரிவும் சேர்த்து 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்று 5வது பிரிவாகப் பார்க்கப்பட்டவர்களும் சாதி கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதற்குள்ளும் சுத்தம் அசுத்தம் என்ற அளவுகோலின் அடிப்படையில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்மணம் என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்டப் பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் இனக்குழுக்களை ஒரு சாதி என்று கணக்கிடுகின்றோம். இன்றைக்கு சாதியின் பல அளவீடுகள் மாறிவிட்டது. உள்மணம் மட்டுமே எளிமையான கணக்கிடும் முறையாக இருந்து வருகின்றது. எந்த சாதிகளும் உயரிய பழக்கவழக்கங்களாக கருதப்படும் அல்லது மேல்சாதிகளின் பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தால் உயர்ந்த சாதிகளாக மாறிக்கொள்ளும் சமூக நகர்வும் நடந்து வருகின்றது. ஆனால் அந்த நகர்வும் கீழ்மூன்று வர்ணங்கள் வரைதான் நடக்க முடியும் முதல் வர்ணத்திற்குள் யாரும் நுழைய முடியாது. அதாவது சூத்திரர்கள் சத்திரியர்கள் என்றோ,

வைசியர்கள் என்றோ தங்கள் வர்ணத்தை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் பிராமணர் வர்ணம் என்று மாறமுடியாது. ஒரு தனிநபரின் வகுப்புநிலை உயர்வால் மட்டும் ஒரு சாதியின் நிலையை உயர்த்த முடியாது. ஒரு தனிநபர் ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாறமுடியாது.

 வகுப்பு என்பது வருமானம், சொத்து, தொழில் போன்ற புறக்கணிகளின் அடிப்படையில் மேலும் கீழுமாகப் பல வகுப்புகளாகவும் உபவகுப்புகளாக பிரிக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு நகர்ந்து கொள்ளலாம். இது மேல் நோக்கியும் நடக்கலாம் கீழ் நோக்கியும் நடக்கலாம். ஒருவர் எந்த வகுப்பில் இருக்கிறார் என்பதை கண்டறிய அன்றைய நிலையில் அவரின் புறக்காரணிகள் எப்படி இருக்கின்றது என்பதைப் பொறுத்தது. இந்தியாவில் வெறும் பொருளாதார காரணிகளைத் தாண்டி, ஏற்றத்தாழ்வான நெகிழும் தன்மையற்ற சமூக கட்டமைப்புகள் உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிற்பட்ட நிலையில் இருக்கும் சமூகங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றும் மற்றவர்களை முன்னேறிய வகுப்பினர் என்றும் வகைக்கப்படுத்துகிறோம். பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள்ளும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களை அட்டவணைச் சாதிகள் என்றும், பழமையான பழக்கவழக்கம் கொண்ட பூர்வகுடிகளை அட்டவணைப் பழங்குடிகள் என்றும் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இதரபிற்படுத்தப்பட்டோர் அல்லது சமூகரீதியாக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்று வகைப்படுத்துகின்றோம். ஆனால் நாம் மேலே பார்த்த பழ பழங்குடிகளான அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள்(DNT), நாடோடிப் பழங்குடிகள்(NT), பூர்வ பழங்குடிகள்(AT) போன்ற பல பழங்குடிகள் எந்த பிரிவிலும் சேர்க்கப்படாமல் கண்ணுக்குத்தெரியாத சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர்.


 ஓபிசி வகுப்பினர்களை மேலே சுட்டிக்காட்டியபடி மண்டல் ஆணையம் வகுத்த அளவீடுகளின் படி கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சாதியும் ஒரு காரணியாகப் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கில், உச்சநீதிமன்றம் இந்தியாவில் வகுப்பும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளதால் ஒரு சாதியை மற்ற காரணிகளோடு சேர்த்து ஒரு வகுப்பாகக் கருதலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சாதி அடிப்படையில் மட்டும் ஒரு வகுப்பை உருவாக்க முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. ஒவ்வொரு சாதியையும் ஒவ்வொரு வகுப்பாகக் கருதினால் இந்தியாவில் 4635 வகுப்புகளாகப் பிரிக்க வேண்டும். அது நடைமுறைச் சாத்தியமில்லாதது.

 இந்திய அரசமைப்புச்சட்டம் வகுப்புவாரி இட ஒதுக்கீடுதான் வழங்க முடியும். ஒரு வகுப்பில் முன்னேறியவர்கள் மற்றவர்கள் வாய்ப்பைப் பறிக்கின்றார்கள் என்றால் அவர்களை அந்த வகுப்பிலிருந்து நீக்க வேண்டும் அப்போதுதான் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கேரளாவில் சாதிவாரி இட ஓதுக்கீடு 1935 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.  அது வெறும் சாதிவாரி இட ஒதுக்கீடு அல்ல. வெவ்வேறு சமூக கல்வி நிலையில் இருக்கும் சமூகங்களை வேறு வேறு பிரிவில் வைத்து இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது வகுப்புவாரி இட ஒதுக்கீடே. எனவே சாதிவாரி இட ஒதுக்கீடு கேட்பதும் கொடுப்பதும் 100% சட்டத்திற்கு எதிரானது.

வகுப்புவாரி இட ஓதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடு வழங்க முடியுமா என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் பரிசீலித்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் மிக மிக பின்தங்கிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிக்கலாம் என்று கூறியுள்ளது. அப்படிப்பட்ட இரு பிரிவுகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் நிலவ வேண்டும் அப்போதுதான் பிரிக்க முடியும் சற்று வேறுபாடு இருக்கின்ற என்பதற்காக பிரிக்க முடியாது. சாதியை மட்டும் வைத்து பிரிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. ஒரு சாதி ஒரு வகுப்பாக கருதப்படலாம். ஆனால் அந்த சாதிகள் ஒத்தநிலையில் இருக்கின்ற போது வேறு வேறு வகுப்புக்களாகப் பிரிக்க முடியாது. மேலும் ஓபிசியில் இரண்டு பிரிவுகளாக மட்டும் தான் பிரிக்க முடியும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு சென்று சேரவில்லையென்றாலோ அல்லது ஒரு சாதி வளர்த்து விட்டார்கள் என்ற தரவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை வேறு பிரிவிற்கு மாற்றம் வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஒவ்வொரு சாதியையும் ஒரு வகுப்பாக கருதினால் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி சமூகநீதியின் செயல்பாட்டையே திணரடித்துவிடும். எனவே, சரியான துல்லியமான சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீட்டு முறையே சமூகநீதியை எல்லா சமூகங்களுக்கும் கொண்டு சேர்க்கும் சரியான வழி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved