🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 11

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 11

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டவரும் , இயற்பியலின் தந்தை எனவும் போற்றபெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் பற்றி பார்ப்போம். இயற்க்கையில் நான்கு விசைகள் உண்டு அவை ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான அணுக்கரு விசை, வலு குன்றிய அணுக்கரு விசை. இவைகளே இயற்கையின் நான்கு அடிப்படை விசைகள் ஆகும்.

இதில் ஈர்ப்பு கோட்பாட்டின் தற்கால வேலை 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 17 ஆம் நூற்றாண்டின்ஆரம்பத்தில்  கலிலியோவால் தொடங்கப்பட்டது. அவரது புகழ்பெற்ற சோதனையான பீசா கோபுரத்தில் இருந்து பந்துகளை விட்டது, பின்னர் சாய்வுகளில் பந்துகளை கவனமாக அளவிட்டதன் மூலமாக கலிலியோ ஈர்ப்பு விசை அனைத்து பொருட்களையும் ஒரே வேகத்தில் துரிதப்படுத்துகிறது என்று காட்டினார். இது அரிஸ்டாடிலின் கொள்கையான கனமான பொருட்கள் அதிகமான வேக வளர்ச்சி கொண்டவை என்பதை மாற்றியது. இலகுவான பொருட்கள் காற்றின் எதிர்ப்பினால்  வளிமண்டலத்தில் மிகவும் மெதுவாக விழும் என்று கலிலியோ சரியாக சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கலிலியோவின் வேலை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாடு உருவாக உதவியது.

ஐசக் நியூட்டன் (டிசம்பர் 251642 – மார்ச் 201727). 

ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,அறிவியலாளரும்தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமா*ன ஒருவராகவும் இவர் இருந்தார்.நியூட்டனின் எளிய பிரபஞ்ச ஈர்ப்பு விதி மிக அதிக இடங்களில் துல்லியமான தோராய மதிப்பை வழங்குகிறது.

1687 ஆம் ஆண்டு, ஆங்கில கணித மேதை சர் ஐசக் நியூட்டன் பிரின்சிப்பியா என்னும் அறிவியல் இதழில் பிரபஞ்ச ஈர்ப்பு நேர்மாறான சதுர விதியை (Inverse Square Law) வெளியிட்டார். அவரது சொந்த வார்த்தைகளில், "கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் சுற்றி வரச்செய்யும் விசை அவற்றின் ஆரத்திற்கு எதிர்மறையாக இருக்கும்" என்பதைக் கண்டறிந்தார். மேலும் அவர் இந்தக் கருத்தை சந்திரனுக்கும் பூமிக்கும் பயன்படுத்தினார். அவைகள் ஏறக்குறைய ஒத்துப்போவதை அறிந்தார்.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும் என்பதையும் நிரூப்பித்தார்.

அதாவது, m1 ,m2 என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,
F = G m1 m2/ r2

G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10−11 N m2 kg−2. SI அலகு முறைப்படி, நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம், சிந்திப்போம் வாருங்கள்.

அன்புடன் உங்கள்

கெ.நாகராஜன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved