🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 12

விஞ்ஞானமும்விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 12.

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த பகுதியில் எப்படி புவியீர்ப்பு விசை நம்மிடம் வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு என்றால் இதுவும் ஒன்றாகும். சர் ஐசக் நீயூட்டனின் அறிவு கூர்மையால் அவர் தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டார், கீழே இருந்து மேலே தூக்கி வீசப்பட்ட பொருட்கள் ஏன் கீழே வந்து விழுகிறது? என்பது தான் அந்த கேள்வி.!

அவர் ஒரு முறை இங்கிலாந்தில் தனது ஆப்பிள் தோட்டத்தில் உட்கார்ந்து சிந்தித்து கொண்டு இருந்த போது, தனது தலையில் ஒரு ஆப்பிள் விழுகிறது, அப்போது அவரிடம் இருந்த விழிப்புணர்வு சக்தி அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல், இது ஏன் மேலே செல்லாமல், கீழே விழுகிறது என கேள்வி எழுப்புகிறது. அதன் விளைவாகத் தான் இந்த   ஈர்ப்பு சக்தி என்ற ஒரு ஈர்ப்பு விசை ஒவ்வொரு பொருளை சுற்றியும் இருப்பதை முதன் முதலில் கண்டறிவதில் ஆர்வம் காட்டினார். இதன் விளைவாகவே, இந்த பிரபஞ்சத்தில் இருவேறு நிறைகளிடத்தில் அதாவது மிகச் சிறிய அணுக்கள் முதல் மிகப்பெரிய கோள்கள் வரை, ஒன்றையொன்று ஈர்த்து கொண்டும் தொடர்ந்து இயங்கி கொண்டும் உள்ளது. இது அற்புதம் இல்லையா!   அவரே தனது இயக்க விதிகளில் ஒவ்வொரு விசைக்கும் ஒர் எதிர் விசை உள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளார். 

சரி இந்த ஈர்ப்பு விசையால் நமக்கு என்ன பயன், இந்த ஈர்ப்பு விசையால் தான் நாம் பூமி பந்தில் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது, சாப்பிட்ட உணவு வயிற்றுக்கு சென்று மீதம் உள்ளவை யாவும் கீழே வருகிறது. நாம் பருகும் யாவும் நம் வயிற்றுக்குள் செல்வதற்கும் பின்னர் கீழே செல்வதற்கும் காரணமாக உள்ளது. இந்த பிரபஞ்ச இயக்கமே இந்த ஈர்ப்பு விசையால் தான் இயங்குகிறது. ஆனால் ஈர்ப்பு விசையின் அளவு ஒவ்வொரு கோளுக்கும் , அதன் துணை கோள்களுக்கும் வேறுபடும். நமது உடலின் எடையே இந்த ஈர்ப்பு சக்தி இருப்பதால் தான் அறிய முடிகிறது. மேலும் இதைப் பற்றிய இன்னும் சுவாரசியமான செய்திகளை அடுத்த பதிவில் பார்ப்போம். வாருங்கள் சந்திப்போம் , சிந்திப்போம்!

அன்புடன் உங்கள்,

முனைவர் கெ.நாகராஜன், இயற்பியல் பேராசிரியர், பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved