🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 13

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 13.

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

கடந்த பன்னிரண்டு வாரங்களாக விஞ்ஞானமும் மெய்ஞானமும் என்ற தலைப்பில் நாம் அநேக விசயங்களை தெரிந்து கொண்டோம்.

குறிப்பாக இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது, விஞ்ஞான ரீதியாகவும், மெய்ஞ்ஞான ரீதியாகவும் எவ்வாறு வளர்ச்சி கண்டிருக்கிறோம் என்பதை யையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொண்டோம். மேலும், வரும் வாரங்களில் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நாம் அறிய இருக்கிறோம். மெய்ஞ்ஞான ரீதியாகவும் மனித மேம்பாடு மற்றும் அறிவியல் பயன்பாட்டின் விளைவாக மனித இனம் அடைந்த நன்மைகள் தீமைகள் பற்றியும் விரிவாக அறிய உள்ளோம். இருப்பினும், நாம் இதுநாள் வரை அறிந்த வற்றில் எவ்வளவு விசயங்களை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொண்டோம் என்பதை அறியும் வண்ணம் இந்த வாரம் 12 வினாக்களை இந்த பதிவிலும் மற்றும் அடுத்த 12 வினாக்களை அடுத்த பதிவிலும் பதிவிட்டு வாசகர்களிடம் மேலும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் அமைத்துள்ளேன். இதோ முதல் ஆறு பகுதிகளில் இருந்து இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதன் சரியான பதில்களை அடுத்த பதிவில் அறிந்து கொள்ள முடியும். சரியான பதில்களை எழுதி அனுப்பும் நபர்களுக்கு தக்க பரிசு வழங்கப்பட உள்ளது. நிறுவனத்தின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு ஆகும்.

வினாக்கள்:

  1. எந்த இரண்டு தெய்வங்களை தொழுது நமது விஞ்ஞானமும் மெய்ஞானமும்  பகுதி ஆரம்பிக்கப்பட்டது?

  2. சித்தர்கள் வரிசையில் எந்த சித்தர் எழுதிய நூலை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டோம்? அந்த நூலின் பெயர் என்ன?

  3. உலகில் அதிகமாக ஆளக்கூடிய பண்பு நிலைகள் எவையெவை?

  4. நாம் சிறந்த மெய்ஞ்ஞானவாதிகள் எனக்கருதிய இருவர் யார்யார்?

  5. தமிழ் படிகள் என எவற்றை குறிப்பிட்டோம்?

  6. இந்த பிரபஞ்சத்தில் காணப்படும்  உலகங்கள் எத்தனை என்பதை மெய்ஞானம் கூறுகிறது?

  7. ஆறு ஆற்றல் நிலைகள் நம் உடலில் எந்தெந்த இடங்களில் அமைந்துள்ளது?

  8. எந்த அறிவியல் அடிப்படை விதிகளின் கீழ் பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்று கூறினோம்?

  9. சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிரபஞ்சம் தோன்றியது?

  10. உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அடையும் மூன்று நிலைகள் யாவை?

  11. வெப்பத்தை அளக்கும் அலகின் பெயர் என்ன?

  12. புராணங்களில் எத்தனை யுகங்கள் உள்ளது என்று கூறப்பட்டது? அவை யாவை?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். வாருங்கள் தொடர்ந்து சிந்திப்போம்.


என்றும் அன்புடன் உங்கள்


முனைவர் கெ நாகராஜன்

இயற்பியல் பேராசிரியர்,

பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved