🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 14

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரப் பகுதியில், சென்ற வாரம் பகுதியில் கேட்டகேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தலில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை அறிவேன்எனவே அதற்கான விடையை அறிவதற்கு முன் ஈர்ப்பு விசையை பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை அறிவோம். நான் ஏற்கனவே கூறியது போல இந்த ஈர்ப்பு விசையானது கோள்களிடையே வெவ்வேறானதாகவே இருக்கும். காரணம் அந்த கோள்களின் மையப் பகுதியில் அமைந்துள்ள தனிமங்களின் சேர்க்கையை பொறுத்தும் அதன் எடையை பொறுத்தும் வேறுபடும்.  உதாரணமாக, பூமியில் ஒரு பொருளின் மீது செயல்படும் முடுக்கம் பூமியின் ஈர்ப்பு சக்தியால் (acceleration due to gravity) 9.8 m/s^2 என்ற அளவில் இருக்கும்எனவே 10 கிலோ எடையுள்ள பொருளின் மீது ஏற்படும் முடுக்கம் a= F/m என நிர்ணயிக்கப்படும். 10*9.8/10 = 9.8m/s^2. இதே ஈர்ப்பு விசை பூமியின் துணைக்கோள் அல்லது செயற்கை கோளாகிய சந்திரனில் 1/6 மடங்கு பூமியின் ஈர்ப்பு தான். எனவே பூமியில் ஒருவரது எடை 60 கிலோ என்றால் சந்திரனில் அதே நபரின் எடை வெறுமனே 10 கிலோ தான். ஏனெனில், அங்கே பொருட்கள் மீதான முடுக்கம் 1.63m/s^2 மட்டுமே. எனவே வெவ்வேறு கோள்களில் பொருட்கள் மீதான முடுக்கம் வெவ்வேறுகத்தான் இருக்கும்.

இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஈர்ப்பு சக்தி எல்லா பொருட்கள் மீதும் ஒரேமாதிரியான முடுக்கத்தையே உண்டு பண்ணும் என்பதை ஒரு சிறிய செயல்முறை விளக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கிலோ இரும்பு, ஒரு கிலோ பூக்களை எடுத்து கொண்டு காற்று உள்ளீடற்ற ஊடகத்தில் (Vacuum) ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே விடும் பொழுது இரண்டு பொருட்களுமே ஒரே சமயத்தில் தரையில் விழுவதை காணமுடியும். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! அதுதான் உண்மை. இரும்பு முதலிலும், பின்னர் பூக்கள் தாமதமாகவும் தரையை அடைவதில்லை. காரணம் இரண்டு பொருட்கள் மீதான முடுக்கம் ஒரே மாதிரியாக இருப்பதுதான். இதே செய்முறையை காற்று உள்ள ஊடகத்தில் செய்து பார்க்கும் போது முதலில் இரும்பும் பின்னர் பூக்களும் தரையை வந்து விழுவதை காணமுடியும். இதற்கு காரணம் காற்றின் மீதான உராய்வு பூக்களின் முடுக்கத்தை குறைத்து விடுகிறது. எனவே, பூக்களும், இரும்பும் ஒரே சமயத்தில் தரையை அடைவதில்லை.

எனவே தூக்கி எரியும் பொருட்கள் கீழே வருவதற்கு முக்கிய காரணம் அந்தந்த கோள்களின் மேல் இருக்கும் ஈர்ப்பு விசைதான். கொஞ்சம் நினைத்து பாருங்கள் இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் எவ்வாறு இருப்போம் என்று? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. வாருங்கள் தொடர்ந்து சிந்திப்போம் அடுத்த வாரம் சந்திப்போம்.
சென்ற வார கேள்விகளுக்கு சரியான பதில்கள் இதோ.

1)       விநாயகர், சரஸ்வதி

2)       திருமூலர், திருமந்திரம்

3)       அன்பு, அறிவு

4)       ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர்

5)       கல்வி, அறிவு, ஒழுக்கம், அன்பு, கருணை, அருள்

6)       பதினான்கு உலகங்கள் ஆசனவாய்க்கு சற்று மேலே, அடிவயிற்றில், தொப்புள், நெஞ்சு, தொண்டை, இரண்டு புருவமத்தியில்

8)       பெரிய வெடிப்பு ( Big Bang)

9)       15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே

  1        0) பிறத்தல், இருத்தல், மறைத்தல்

        1) கெல்வின் (K) Kelvin

        2) நான்கு, கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர்.கெ.நாகராஜன்
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயமுத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved