🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 15

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி -15

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

நீங்கள் அனைவரும் ஆரோக்கியமுடனும், சுருசுருப்பாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்! இந்த உடம்பு, அதில் இருக்கும் உயிர் எல்லாம் இறைவன் நமக்கு அளித்த கொடை. நாம் ஒவ்வொருவரும் பல கோடிக்கு சொந்தக்காரர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்பு சரியில்லை அல்லது எதாவது ஒரு கோளாறு என்றால் அதை சரி செய்ய வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய நிலையில் இன்று உலகம் மாறிவிட்டது. எனவே, சொந்தங்களே நாம் நமது உடம்பு, ஆரோக்கியம் விசயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விஞ்ஞான நாம் உலகில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு, இறைவன் நமக்கு அளித்த இந்த உடம்பை வீணாக்காமல் நன்கு பராமரிக்க வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய சூழலில் நமது இளைய தலைமுறையினர் தவறான பழக்க வழக்கங்களை தழுவி வாழ ஆரம்பிக்கின்றனர். அது நமது பண்பாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாம் இந்த உடம்பை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தனது பாடல் வரிகளால் அருளியுள்ளார் திருமூலர்.

                  உள்ளம் பெருங்கோயில்

                   ஊன்உடம்பு ஆலயம்;

                   வள்ளல் பிரானார்கு

                   வாய்கோ புரவாசல்;

                   தெள்ளத் தெளிந்தார்குசீவன் சிவலிங்கம்;

                   கள்ளம் புலன் ஐந்தும் காளா

                    மணிவிளக்கே! (1823)

இதிலே கோவில் என்பது இதுவரை நீங்கள் ஊற்றைச் சடலம் என்று எண்ணியிருந்த ஊன் உடம்பு. உள்ளந்தான் கருவறை. வாய்தான் கோபுர வாசல். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் சீவன்தான். கள்ளத்தனம் செய்வதாக நீங்கள் கருதியிருந்த ஐந்து புலன்கள்தாம் உங்கள் இறைவனார்க்கு நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகள்.

எனவே சொந்தங்களே, நமது உடல் இறைவன் உறையும் இடம். இதை தவறாக பயன்படுத்தி நோயை நாமே வருவித்து கொண்டால் இறைவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் நல்லவைகளாக இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் காட்டிய தர்ம வழியில் வாழ வேண்டும்.  உள்ளத்தை சரியாக வைத்துக் கொண்டோம் என்றால் நம் எண்ணங்கள் சரியாக இருக்கும், எண்ணங்கள் சரியாக இருந்தால் நமது செயல்கள் சரியாக இருக்கும், செயல்கள் சரியாக இருந்தால் நமது நோக்கம் நிறைவேறும். இது திண்ணம்.

இந்த பகுதியில் நாம் ஏற்கனவே அறிந்த பகுதிகள் 7 முதல் 12 வரையில் அறிந்தவற்றில் உள்ள வினாக்களை காண்போம். இதற்கான விடைகள் அடுத்த பகுதியில் இடம் பெறும்

  1. எந்த விதியின்படி அணுக்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவியது?

  2. இந்த பிரபஞ்சத்தில் ஆரம்ப நிலையில் எந்தெந்த அணுக்கள் நிறைந்து இருந்தது?

  3. நாம் வசிக்கும் பேரண்டத்தின் பெயர் என்ன?

  4. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் எவையெவை?

  5. எத்தனை கண்டங்கள் உள்ளன?

  6. உலகின் எந்த பகுதியில் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை வருடம் முழுவதும் இருக்கிறது?

  7. விஞ்ஞானத்தின் பிரிவுகளாக எதை குறிப்பிடுகிறார் ஆசிரியர்?

  8. கோள்களின் இயக்க விதிகளை கண்டுபிடித்தவர் யார்?

  9. அடிப்படையில் எத்தனை விசைகள் உள்ளன?

  10. பிரபஞ்சத்தில் இரண்டு பொருட்கள் மத்தியில் ஈர்ப்பு விசை உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?

  11. ஈர்ப்பு சக்தி உருவாவதற்கு காரணம் எதனால் உண்டாகிறது?

  12. பூமியின் மேற்பரப்பில் பொருட்கள் மீதான உள்ள முடுக்கத்தின் அளவு எவ்வளவு?

    இதற்கான சரியான பதில்களை எழுதி அனுப்புவோர்க்கு தக்க பரிசுகள் வழங்கப்படும். நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது.  தங்களின் பதில்களை இனையதள முகவரிக்கு அனுப்பவும்.

வாருங்கள் தொடர்ந்து சிந்திப்போம் அடுத்த வாரம் சந்திப்போம்!

 என்றும் அன்புடன் உங்கள் முனைவர். கெ. நாகராஜன், இயற்பியல் பேராசிரியர், பி‌‌.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved