🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் பகுதி - 20

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

அநேகமாக பொங்கல் திருநாள் முடிந்து , குல தெய்வ வழிபாடு செய்து, நம்மை காலங்காலமாக காத்து வரும் கால்நடைகளுக்கு வர்ணம் பூசி, உணவளித்து களிப்புடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இனி மீண்டும் கழனி வேலைக்கு தயாராகிக்கொண்டு விவசாயம் பார்ப்பதற்கும், வேலைக்கு வெளியூர் செல்லவும் தங்களை ஆயப்படுத்தி உள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த வாரம் விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் பகுதியில் உடல் வெப்பம் மற்றும் , உடல் சூடு பற்றி சிந்திக்கலாம்.

(Heat and temperature) ஒரு பொருளின் வெப்பம் அல்லது ஈரப்பதம் என்பது அந்த பொருளின் சூடு ( temperature of the body) எனக் கூறலாம். ஆனால், வெப்பம் அதாவது heat என்பது ஒருவித ஆற்றல். ஏன் இன்று இவ்வளவு வெப்பமாக உள்ளது? என கேள்வி எழுப்பினால், இன்று வெயிலின் அளவு அதிகம் எனவே வெப்பமாக இருக்கிறது எனக் கூறுவோம். ஆனால் உடல் ஏன் இவ்வளவு சூடாக உள்ளது? என கேட்டால் அதற்கு எப்படி பதில் கூறுவது? உடலில் ஆற்றல் அதிகரிக்கும் போது உடல் சூடாக உள்ளது என பதில் கூறலாம். 

அதாவது, நாம் பொதுவாக வேலை செய்யும் பொழுதும், உதாரணமாக ஒருவர் சைக்கிள் ஓட்டும் பொழுது அல்லது ஒருவர் ஒடும் பொழுது அல்லது கடினமான வேலை செய்யும் போதும் உடலின் சூடு அதிகமாகும். பின்னர் சற்று நேரத்தில் உடல் சூடு தணிந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். ஆனால் , நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும். உடல் சூடு சராசரியாக உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதுதான்! அதாவது 37° செல்சியஸ் அல்லது 98.4° ப்ரான்ஹீட். நீங்கள் வெப்ப நாடுகளில் வசித்தாலும் அல்லது குளிர் பிரதேசங்களில் வசித்தாலும்  உங்கள் உடல் சூடு சீராகவே உள்ளது. ஆனால் எப்பொழுது குளிர் அல்லது காய்ச்சல் உண்டாகிறது.? உங்களின் உடல் சூடு 37° செல்சியஸை விட குறைவாக இருக்கும் போதும் அல்லது அதிகமாகும் போதும் உடல் சூட்டின் நிலை மாறுபடும். இருப்பினும் நமது உடல் சூடானது ஒரே சமநிலையில் இருக்க, அதாவது நாம் குளிர்ச்சியான சூழ்நிலையில் வசிக்கும் போதும் அல்லது வெப்பமான சூழ் நிலையில் வசிக்கும் போதும் உதவுவது நமது மூளையில் இருக்கும் பைத்தோதாலமஸ் (pythophalamus) என்ற சுரப்பி தான்.

இந்த சுரப்பி நமது உடலின் சூடு அதிகம் ஆகும் போது குளிர்ச்சியை உண்டாக்கி உடல் சூட்டை தணிக்கும். அதேமாதிரி நமது உடலின் வெப்பம் குறையும் போது வெப்பத்தை உண்டாக்கி உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே நமது உடல் சூடு இவ்வாறாக எப்போதும் சமநிலையில் இருக்கும். வெப்ப ஆற்றலை அளவீடு செய்ய நாம் பயன்படுத்தும் அலகு கலோரி அல்லது ஜூல் எனவும் உடல் சூட்டை அளவீடு செய்ய நாம் பயன்படுத்தும் அலகு செல்சியஸ் அல்லது ப்ரான்ஹீட் எனவும் உள்ளது. வாருங்கள் தொடர்ந்து சிந்திப்போம்.அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,

கெ.நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved