🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும்-மெய்ஞானமும்! பகுதி 21

அன்பும், வீரமும் கொண்ட நமது சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்!

கடந்த 29/01/2023 அன்று , சென்னை அதாவது நமது மாநில தலைநகரத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழா நடத்தி நம்மையும், ஏனையோரையும் வியப்பில் ஆழ்த்திய அத்தனை சமுதாய சொந்தங்களுக்கும், பெரியோர்களும் முதற்கண் எனது பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாவது, நமது இனத் தலைவர், விடுதலைக்கு வித்திட்ட வீரமகன், தென்நாட்டு சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு கடந்த 14/02/2023 அன்று தமிழக அரசால் சென்னை மாநகரத்தில் வெண்கல சிலை நிறுவிய நிகழ்வு , நமது சொந்தங்களை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்பது எள் அளவும் சந்தேகம் இல்லை. இதை உடனே நிறுவி திறப்பு விழா நடத்திய தமிழக அரசுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த நமது சொந்தங்களுக்கும் எனது நன்றியையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சொந்த வேலையின் நிமித்தமாக கடந்த மூன்று வாரங்களாகவே விஞ்ஞானமும் மெய்ஞானமும் தொடரில் உங்களை தொடர்ந்து சந்திக்க முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இனி வரும் வாரங்களில் தொடர்ந்து சிந்திப்போம், வாருங்கள் வாசிப்போம் விஞ்ஞானமும் மெய்ஞானமும் தொடரை. 

இன்றைய நிலையில் ஆற்றல் என்பது எல்லாவற்றுக்கும், எல்லாருக்கும் ஒரு இன்றியமையாத ஒன்றாகும். அதை விஞ்ஞானம் மூலம் எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதைப் பற்றி இன்றைய தொடரில் அறிவோம். ஆற்றல் அதாவது Energy எப்படி பெறப்படுகிறது என்பதை முதலில் அறிவோம்.

இதில் இரண்டு வகையான ஆற்றல் உற்பத்தி உண்டு. முதலில் மரபு சார் ஆற்றல் மற்றும் மரபு சாரா ஆற்றல் என இரண்டு வகைப்படும். முதலில் கூறியதில், நாம் பெறுவது பெட்ரோல், டீசல், நிலக்கரி இவற்றைக் கொண்டு , வாகனங்கள் இயக்குவது, தொழிற்சாலைகளை இயக்குவது மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்து அதை ஆற்றாலாக மாற்றுவது என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மரபு சாரா ஆற்றல்களாகிய  அணுமின் நிலையம், மாட்டுச்சாணம் வழியாக உற்பத்தி செய்யும் வாயு, காற்றின் மூலம் உற்பத்தி செய்யும் ஆற்றல், சூரிய ஒளியில் உற்பத்தி செய்யும் ஆற்றல் மற்றும் கடல் நீரில் இருந்து உற்பத்தி செய்யும் ஆற்றல் என பல வகைகள் உண்டு.

இதில் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் ஆற்றல் மற்றும் சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யும் ஆற்றல் காற்று மாசு அற்ற ஆற்றல்களாக கருதப்படுகிறது. இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா மற்றும் நமது மாநிலம் தமிழ்நாடு காற்று ஆற்றல் மற்றும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் ஆற்றலை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது.

மனித ஆற்றலால் என்னற்ற செயல்களை செய்யலாம், எனவே ஆற்றலின் அறிவை மற்றும் பயன்பாட்டை அறிதல் அவசியமாகிறது. இதைப்பற்றி மேலும் அடுத்த வாரமும் சிந்திப்போம்! 

என்றும் அன்புடன் உங்கள்

முனைவர் கெ.நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி,
கோயம்புத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved