🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும்-மெய்ஞானமும்! தொடர்23

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

நாம் கடந்த இரண்டு வாரங்களும் வெவ்வேறு ஆற்றல்களளைப் பற்றி சிந்தித்தோம். இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஆற்றலால் நிறைந்துள்ளது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் அதன் துணைக்கோள்களும் ஒவ்வொரு ஆற்றலுடன் இயங்கி வருகிறது. அவற்றிற்கு யார் ஆற்றலை கொடுப்பது அல்லது பெட்ரோல் அல்லது டீசல் என்ற எரிபொருள் ஏதாவது நிரப்பப்படுகிறதா? இல்லை. பின்னர் எவ்வாறு இயங்குகிறது என்றால் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என ஒன்று உள்ளது. அதிலிருந்து தனக்கு தேவையான ஆற்றலை கிரகித்துக் கொள்ள முடியும். 

சரி நமது உடல் இயக்கம் எப்படி நாம் சாப்பிட்டாலும், சாப்பிட மறந்தாலும் இயங்குகிறது? அதுதான் மேஜிக். நமது உடலில் பலவிதமான ஆற்றல் தளங்கள் அல்லது மையங்கள் உள்ளன. அவை தொடர்ந்து இயங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானவை ஆறு அல்லது ஏழு மையங்கள். அவை நாம் ஏற்கனவே முதல் பதிவுகளில் கோடிட்டு காட்டியுள்ளோம். இருப்பினும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ஆறு மையங்கள் அல்லது சக்கரங்கள் என்பவை மூலாதாரம், சுவாதி ஸ்தானம், மணி பூரகம், அநாகதம், விசூக்தி, ஆக்ஞ்யம் மற்றும் ஏழாவது மையம் சகஸராரம்.

இவைகள் ஒவ்வொன்றும் ஒரு வேலையை செய்து வருகிறது. இதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் நேர்மறையான சக்தியை கொடுக்கிறது. இவற்றை முறையான உடல் பராமரிப்பாலும், மன பயிற்சி மூலமாகவும் தொடர்ந்து இயக்கி உடல் மற்றும் உள்ளத்தின் ஆற்றலை குறையாமல் பாதுக்காக்க முடியும். நமது உடலில் இந்த ஆற்றல்களின் இருப்பிடத்தை குறிக்கும் வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.  

இந்த சக்கரங்கள் அல்லது ஆற்றல் மையங்கள் பற்றி மேலும் அடுத்த வாரம் சிந்திப்போம். நன்றி!

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved