🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் – பகுதி 24

அன்புச் சொந்தங்களே வணக்கம்,

நமது உடலில் உள்ள ஆற்றல் உண்டு பண்ணும் ஆதார சக்கரங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதை நான் உணருகிறேன். வாருங்கள் அறிந்து கொள்வோம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை நிலையில் நாம் அனைவரும் ஆரோக்கியமுடனும், சிறந்த மனநிலையுடனும் வாழ வேண்டும் என்றால் இந்த ஆறு மையங்கள் அல்லது ஆற்றல் நிலைகளை நாம் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக வைத்துக்கொள்ள நாம் தினமும் காலை அல்லது மாலை வேலையில் அதாவது சூரியன் உதிக்கும் வேலையில் அல்லது மறையும் வேலையில் இந்த ஆற்றல் மையங்களை  இயக்கி அதன் செயல்பாட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதை செய்தால் எனக்கு என்ன நன்மை என நீங்கள் வினவுகிறது எனக்கு புரிகிறது. இதை யார் சரியாக செய்கின்றனரோ அவர்களின் ஆற்றல் நிலை அபரீதமாக இருப்பதை உணரமுடியும், எளிதில் எந்த ஒரு உடல் நோயும் உங்களை வந்து அண்டாது. இதை யார் ஒருவர் தனது தினசரி வேலைகளில் ஒன்றாக கருதி தொடர்ந்து செய்வேராயின் அவர் தேஜஸ் மற்றும் சிந்தனைகள் சிறப்பாக இருக்கும். 

இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்து வருகின்றன. முதலாவது சக்ரமாகிய மூலாதாரம் நமது உடலில் முதுகுத் தண்டு முடிவடையும் இடத்தில் இருந்து மேல்நோக்கி ஒரு பாம்பின் வாழ் மேல் நோக்கி இருப்பதுபோல் நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் அதற்குள் ஒரு சதுரம் பின்னர் அதற்குள் ஒரு முக்கோணம் அந்த முக்கோணத்தில் மூன்றறை சுற்று சுற்றி பின் மேலழும்பும அமைப்பில் உள்ளது. இதற்கு ஒரு பீஜ மந்திரம் உள்ளது இதை நாம் மனதில் நினைத்துக் கொண்டு அதை உச்சரிக்கும் பொழுது மூலாதாரச் சக்கரத்தில் உள்ள ஆற்றல் நமது உடல் தண்டுவடத்தில் உள்ள சூசுமன நாடி மூலம் குண்டலினிய சக்தியை சகஸராரத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறாக ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு பீஜ மந்திரம் உள்ளது அவற்றை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் உச்சரிக்கும் பொழுது அந்த சக்கரம் அதிக சிரத்தையுடன் செயல் பட ஆரம்பிக்கும். இப்படியாக ஏழு சக்கரங்களை  சுமார் 21 நிமிடங்கள் பயிற்சி செய்யும் பொழுது ஆற்றல் மையங்கள் அதிக ஆற்றலை பெற்று உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பெறுவது உறுதி. எனவே, நாம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் அல்லது மாலையில் ஒரு முப்பது நிமிடங்கள் பயிற்சி செய்வது உடல் நலம் மற்றும் மனநலம் மேம்படும். நன்றி அடுத்த வாரம் எந்தெந்த சக்கரத்திற்கு என்னென்ன பீஜ மந்திரம் அதை எப்படி இயக்குவது என்பதைப் பற்றி அறிவோம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved