🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - தொடர் 26

அன்புச் சொந்தங்களே வணக்கம்,

நாம் தொடர்ந்து நம் உடலில் உள்ள ஆற்றல் நிலைகளை எப்படி இயக்குவது, பின்னர் அதனை உள்வாங்கி கொண்டு அதன் பயன்களை எப்படி பெறுவது என்பதைப் பற்றி சிந்தித்து கொண்டு உள்ளோம். சென்ற வாரம் முதல் ஆதார சக்கரமாகிய மூலாதாரச் சக்கரத்தைப் பற்றி சிந்தித்தோம். இந்த வாரம் இரண்டாம் சக்கரமாகிய சுவாதிஷ்டானம் பற்றி அறிந்து கொள்வோம்.

இது இரண்டாவது முக்கிய சக்கரம், மூலாதாரத்திலிருந்து நான்கு விரற்கடை மேலே அமைந்துள்ளது. நாற்கோணம் அதைச் சுற்றி வட்டம் அதைச்சுற்றி ஆறு தாமரை இதழ்கள் பொன்னிற மஞ்சள் நிறம். இதன் உயிர் சக்தி ஆறுக் கலைகள் ஆகும். பீஜ மந்திரம்: ஐயும். சிவ பீஜ மந்திரம்: நம்.


சுவாசம்: ஒரு நாளில் 3000 சுவாசம் நடைபெறும்.
இத்தலத்தின் பூதம்: பிருத்வி அதாவது பூமி அல்லது மண்.
பஞ்சவித்து: உகாரம் என்ற பஞ்சவித்து.
வேதம்: ரிக் வேதம்.
அவத்தை : துரியாதீதம் என்ற உணர்வு நிலை ஆகும்.
அதிர்வலை: காம அதிர்வலை உருவாகும்.
அதிதேவதைகள்: சரஸ்வதி, பிரம்மா

இந்த தலத்தில் சரஸ்வதி, பிரம்மா வை வேண்டி குழந்தை பாக்கியம் உண்டாதல் சிறப்பு. மற்றும் அறிவு, ஆற்றல் நிலைகளை பெறுவதற்கும் இந்த ஆற்றல் நிலையை பயன்படுத்தலாம்.இதன் சிறப்பைப் பற்றி போகர், அகத்தியர் மற்றும் திருமூலர் கூறிய கருத்துக்களை அடுத்த வாரம் சிந்திப்போம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved