🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக Vs அதிமுக - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் யார் பெஸ்ட்?

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் அவையில் தாக்கல் செய்த  நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு இன்று (28.03.2023) தமிழக நிதியமைச்சர் பதிலளித்துப் பேசினார். அப்போது ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தக் கட்சியினுடைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று விளக்கமளித்தார். அப்போது அவர் வெளியிட்டுப் பேசிய புள்ளிவிபரம் வருமாறு,

அதிமுக 2011 தேர்தலின் போது அளித்த 184 வாக்குறுதிகளையும் 2016 தேர்தல் போது அளித்த 323 வாக்குறுதிகளையும் சேர்ந்து 507 வாக்குறுதிகளில் அரசாணை வெளியிட்டப்பட்டது 269 தான். அதாவது அளித்த வாக்குறுதிகளில் பாதி அளவிற்கு (50 விழுக்காடு) மட்டுமே அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த வாக்குறுதிகளில் தெந்தமிழகத்தில் ஏரோ பார்க், மதுரையில் தமிழ் தாய் க்கு சிலை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி, பள்ளிகளில் காலை சிற்றுண்டி போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அடங்கும். 

மேலும் அதிமுக ஆட்சியில் மானியக்கோரிக்கை, விவாதம் ஏதுமின்றி 110 விதியின் கீழ் மட்டும் 3 லட்சத்து 27 ஆயிரத்து 187 கோடி மதிப்பிற்கு 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வெறும் 87 ஆயிரத்து 405 கோடிக்கு மட்டும் அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது 27 சதவீத அளவே செயல்படுத்தப்பட்டதாக கூறினார்.   

மாறாக 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த இரண்டாண்டுகளில், ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் 78, முதலமைச்சர் செய்தி வெளியீடாக அறிவித்தது 161, முதலமைச்சர் இதர அறிவிப்புகள் 46, 110 விதியின் கீழ் வெளியான அறிவிப்புகள் 67, முதலமைச்சரின் மாவட்ட அறிவிப்புகள் (சுற்றுப்பயணத்தின் போது) 88, மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதல்வர் அறிவித்தது 5, மூன்றாண்டுகள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது 338, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது 330, மானியக்கோரிக்கையின் போது அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் 2424, ஆகமொத்தம் இதுவரை வெளியிடப்பட்ட 3537 அறிவிப்புகளில் 3038 அறிவிப்புகளுக்கு, சதவீத அடிப்படையில் 86 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த 67 இல் 63 அறிவிப்புகளுக்கு கிட்டத்தட்ட 95 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, 39 அறிவிப்புகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டும், 24 அறிவிப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.

தகவல் உதவி: திரு.வை.மலைராஜன்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved