🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாடார் சமுதாய தலைவிதியை மாற்றிய தனி ஒருவன்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கள் இறக்குபவர்களாகவும், பனையேறிகளாகவும் மட்டும் கருதப்பட்ட நாடார்கள் மற்ற சாதியனர்களால் ஏராளமான கட்டுப்பாடுகளையும், அவமானங்களையும் எதிர்கொண்டனர். நாடார் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்த சமூகங்களில் நாடார்களும் ஒன்றாக இருந்தது. 

அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு சாதியும் அதன் பாரம்பரிய தொழிலுடன் பட்டியலிடப்பட்டுள்ளன, கடந்த சில நூற்றாண்டுகளாக கள் இறக்கும் தொழில் செய்து வந்த சாணார்கள், 1891 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தீண்டத்தகாத சாதிகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டது.

18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நாடார்களைப் பிற சாதியார் சாணான் என்று இழிவாக குறிப்பதையே வழக்கமாகக் கொண்டுயிருந்தனர். இவ்வாறு அழைக்கப்படுவதை நாடார்கள் எதிர்த்தனர்.

நாடார்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த பகுதிகளில், கடுமையான சமூக இன்னல்களை அனுபவித்தார்கள். பொது வீதிகள், கிணறுகள் போன்றவற்றை உபயோகிக்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

உதாரணமாக, 1897, மே 14 அன்று 15 நாடர்கள் கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டனர். கோயிலின் பரம்பரை அறங்காவலர், ராம்நாட்டின் ராஜா எம்.பாஸ்கரா சேதுபதி (மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்), நாடார்கள் தனது கோவிலுக்குள் நுழைந்ததற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

மதுரையில் இருந்த மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் ஆகியவை “மீனாட்சி சுந்தர்க்சுவர்” கோயிலின் எந்தப் பகுதியிலும் நுழைய பிரதிவாதிகள் அல்லது அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (நாடார்கள்) உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தன. அதற்காக நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பொறையார் நாடார்கள் (நாடார்களின் ஒரு பிரிவினர்) பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவைப் பேணி வந்ததாலும், சமூகத்தில் அவர்களின் பிரபுத்துவ அந்தஸ்தின் காரணமாகவும், பொறையாரின் நாடார்கள் எங்கும் இத்தகைய அவமானங்களை எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடார்கள் ஒரு கோவிலுக்குள் நுழைய கூட தடை விதிக்கப்பட்டு இருந்த வேளையில், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தினர் வழக்கமாக கோயில்களில் வழிபட்டு வந்தனர். பொறையார் நாடார் எஸ்டேட்டை  சேர்ந்த ஜமீன்தார் தவசுமுத்து நாடாரின் சகோதர், பொன்னுசாமி நாடார் பல கோயில்களைக் கட்டுப்படுத்தும் கும்பகோணம் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக இருந்தார். 

பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தை சேர்த்த ரத்தினசாமி நாடார், தனது சமூகம் நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் அவமானங்களுக்கு நிரந்தர தீர்வு காண விரும்பினார்.

சட்டமன்றத்தில் நாடார் சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவம் மட்டுமே சமூகத்தின் நலன்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அறிந்து இருந்தார் ரத்தினசாமி நாடார்.

ஒரு “நாட்டுகோட்டை செட்டியார்” தனது சாதியின் பிரதிநிதியாக சட்டசபையில் இடம்பெற்று உள்ளதை போல், தன்னை நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக சட்டசபைக்கு பரிந்துரைக்குமாறு ரத்தினஸ்வாமி நாடார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த நாட்டுகோட்டை செட்டி, ஒரு செட்டியார் சங்கத்தின் பிரதிநிதி என்றும், நாடார்களின் பிரதிநிதியாக ஒருவரை பரிந்துரைக்க நாடார்களுக்கு சங்கம் இல்லையே என்று அரசு ரத்தினசாமி நாடாருக்கு பதில் அனுப்பியது.

ரத்தினஸ்வாமி நாடார் மற்ற அனைத்து நாடார் தலைவர்களையும் தனது இல்லமான கும்பினி தோட்டத்திற்கு அழைத்து, சங்கம் அமைப்பது குறித்து விவாதித்தார்.

அவர் தென்னகம் முழுவதும் ஆட்களை அனுப்பி, நாடார் சமூகத்தை வலுப்படுத்த ஒரு சங்கம் அவசியம் என்ற  விழிப்புணர்வைப் ஏற்படுத்தினர், நாடார் சமூகத்தின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்வதற்கும், நாடார் இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நாடார் மகாஜன சங்கம் தேவைஎன  நாடார்  மக்கள்ளை  உணர வைத்தார். இதற்கான அனைத்து செலவுகளையும் பொறையார் நாடார் எஸ்டேட்  கவனித்து கொண்டது .

பொறையார் நாடார் எஸ்டேட் மீது மாநிலம் முழுவதும் உள்ள நாடர்களுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது, எனவே ரத்தினஸ்வாமி நாடார் அவர் தொடங்கத் திட்டமிட்டுள்ள சங்கத்தில் சேருமாறு கேட்டபோது, சமூகம் அவருக்கு பின்னால் கூடியது.

நாடார்களுக்காக ஒரு சங்கத்தை உருவாக்குவது எளிதான காரியமல்ல. அவர்கள் மற்ற சாதியினரிடமிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முன்னதாக, 1895 ஆம் ஆண்டில், பல நாடார் தலைவர்களும் வணிகர்களும் மதுரையில் ஒரு சங்கத்தை உருவாக்க கூடினர், ஆனால் அவர்களால் சங்கத்தை உருவாக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள நாடார் மக்களின் நம்பிக்கையை பெற முடியவில்லை.

ரத்தினஸ்வாமி நாடருக்கு அது நன்றக தெரியும், எனவே அவர் சவால்களை எதிர்கொள்ள நிறைய செலவு செய்தார். மேலும் அரசாங்கத்தில்  நாடார் எஸ்டேடின் செல்வாக்கும் உதவியது (மாவட்ட ஆட்சியர், நாடார் எஸ்டேடின் ஒரு மாளிகையில்தான் வசித்து வந்தார் மற்றும் மெட்ராஸ் ஆளுநர் தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு வருகை தரும் போதெல்லாம் பொறையார் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனை மற்றும் தரங்கம்பாடி பங்களாவில் தான் விருந்தினராக தாங்கினார்).

அரசாங்கத்தின் அபிமானத்தை கொண்டுயிருந்த, பொறையார் நாடார் எஸ்டேட்டால் மட்டுமே சங்கம் உருவாக்க முடியும் என்று நாடர்கள் சமூகம் நம்பியது! மெட்ராஸ் பிரசிடென்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து 450 பிரதிநிதிகள் வந்தனர்.

1910 பிப்ரவரி 6, 7, மற்றும் 8 ஆம் தேதிகளில், நாடார் சமூகத்தின் 450 பிரதிநிதிகளுடன் பொறையாரில் மாநாடு நடைபெற்றது, மேலும் பிப்ரவரி 7, 1910 அன்று நாடார் எஸ்டேடின் இல்லமான “கம்பெனிஸ் கார்டெனில்” நாடார் மகாஜனா சங்கம் உருவானது.

நாடார் மகாஜனா சங்கத்தின் தலைவராக பொறையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த பொன்னுசாமி நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டி.ரத்தினசாமி நாடார் மாநாட்டின் தலைவராகவும் 450 பிரதிநிதிகளில் 34 பேர் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பொறையார் கம்பெனிஸ் கார்டன் சங்கத்தின் தலைமையகமாக இருந்தது.

டிசம்பர் 1910 இல், மெட்ராஸில் நடைபெற்ற சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் 750 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர், டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாடு முடிந்த உடனேயே இறந்துவிட்டார், இது சங்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடார் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

நிறுவனர் டி.ரத்தினசாமி நாடார் இறந்த பிறகு, சங்கத்தின் தலைவர் பதவி பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்துக்கே என்று சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவியை வகிக்கின்றனர். சங்கத்தின் உறுப்பினர்களால் (தேர்தல் முலம்) தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் சங்கத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் பொறுப்பாவார்.

Courtesy:Nadar Mahajana Sangam.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved