🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 30

விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 30

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

கடந்த ஐந்து வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு ஆற்றல் நிலைகளில் முதல் ஐந்து ஆற்றல் நிலைகளாகிய மூலாதாரம்,   சுவாதிஷ்டானம்,  மணிபூரகம், அனாகதம் மற்றும் விசுக்தி பற்றி அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் நாம் ஆறாவது சக்கரமாகிய ஆக்ஞய சக்கரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.  இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல், தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை ஆகியவற்றின் இருப்பிடம் இது.


விசுக்தி சக்கரத்தில் இருந்து 11 விரக்கடை மேல் ஆக்ஞயா என்ற சுழுமுனை அமைந்துள்ளது. இது இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. வட்ட வடிவம் கொண்டது மற்றும் இரண்டு தாமரை இதழ்கள் இரண்டு பக்கமும் உள்ள அமைப்பை உடையது.

இருப்பிடம்:  புருவ மத்தியில்.

நிறம்:  ஆகாய நீலம் 

ஒலி:  ஹம் 

தொழில்: அருளல் 

அதிதேவதை: சதாசிவம் மற்றும் மனோன்மணி.

செயல்: காமம், லோபம், குரோதம், மோகம், மாச்சரியம் என ஐந்து செயல்கள்.

பிட்யூட்டரி சுரப்பியின் சுரப்புகள் மூளை, நோய் எதிர்ப்புத் திறன், சிறு நீரகம், சருமம், கர்ப்பப்பை ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படுத்துவதால் இவை அனைத்தும் சீராக இயங்க, ஆக்ஞா சக்கரம் சீராக செயல்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் ஆக்ஞா சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்

தலைவலி

மறதி

உடல் எடையில் மாற்றம்

கண் கோளாறுகள்

மலச்சிக்கல்

அதிக சிறுநீர் கழித்தல்

உடலுறவில் நாட்டமின்மை

குழந்தைப் பேறு இல்லாமை

குறைவான உடல் வளர்ச்சி

மூட்டு வலி

சோர்வு

தூக்கமின்மை

சருமக் கோளாறுகள்

நீர்ச்சத்து குறைப்பாடு

சீரற்ற பேச்சுமுறை

மன அறிகுறிகள்

பதட்டம்

பயம்

கோபம்

மன அழுத்தம்

எதிலும் நாட்டமின்மை

தனிமைப்படுதல்

மனநிலை மாற்றங்கள்

எரிச்சல் உணர்வு

தன்மதிப்பு இல்லாமை

மீதமுள்ள சகஸ்ரார சக்கரம் பற்றி அடுத்த வாரம் சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved