🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 32

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -பகுதி-32

அன்புச் சொந்தங்களே வணக்கம்! கடந்த ஆறு, ஏழு வாரங்களாக நாம் நம் உடலில் இருக்கும் ஆற்றல் நிலைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். அவைகளில் மிக முக்கியமாக மூலாதார சக்கரம், சுவாதிஷ்டான சக்கரம், மணிப்பூரகம், அநாகதம்,  விசுக்தி, ஆக்ஞனேயம் மற்றும் சகஸ்ராரம் பற்றி அறிந்து கொண்டோம். இதுபோல், இன்னும் நமது உடலில் பல்வேறு சக்கரங்கள் வெவ்வேறு நிலைகளில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இருப்பினும் இந்த ஏழு சக்கரங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் இந்த ஏழு சக்கரங்களையும் எப்படி இயக்குவது அதன் மூலம் எப்படி ஆற்றலை பெறுவது என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். முதலாவது சக்கரமாகிய மூலாதாரத்தை  இயக்க அதற்குரிய பீஜ மந்திரத்தை சொல்லி அந்த நிலையில் சுமார் மூன்று நிமிடங்கள் நமது கவனத்தை செலுத்த வேண்டும். இதுபோல் ஒவ்வொரு சக்கர நிலையிலும் அதன் பீஜ மந்திரத்தை  மூன்று நிமிடங்கள் உச்சரித்து அந்த குறிப்பிட்ட சக்கரத்தின் மீது நமது கவனத்தை செலுத்தி குண்டலினி சக்தியை மேலெழும்பச் செய்வதாகும் இதற்கு சுமார் 21 நிமிடங்கள் ஆகும். எனவே, நாம் நமது உடலில் உள்ள ஆற்றல் நிலைகளை சீராக  இயக்குவதற்கும் மற்றும் ஆற்றலை பெறுவதற்கும் தினமும் காலையில் 6 முதல் 7 மணி வரையில் உள்ள நேரத்தில் அல்லது மாலையில் ஐந்து முப்பதிலிருந்து ஆறு முப்பது வரை உள்ள நேரத்தில் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து ( காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும்) பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி சின்முத்திரையில்   வலது மற்றும் இடது தொடையின் மேல் கைகளை வைத்து இந்த ஏழு ஆற்றல் நிலைகளையும் இயக்கச் செய்து ஆற்றலை பெருக வைப்பது நமது  ஒவ்வொருவருக்கும் அவசியம். மேலும் இதனோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் என்று சொல்லப்படும் 12 நிலைகளை செய்து வந்தால் நமது உடலில் எந்த நோய் தாக்குதலும் இன்றி ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், தெளிவாகவும், நலமுடன் வாழ உதவிடும். இதை இன்றைய விஞ்ஞானம் உடல் பயிற்சி என்று கூறுகிறது.  

இதோ பீஜ மந்திரம் 7 சக்கரத்திற்கும்.

லம்- மூலாதாரம் சக்கரம்

நம்- சுவாதிஷ்டம்

ரம்- மணிபூரகம்

ரம்- அநாகதம்

ஹம்- விசுக்தி

நம்- ஆக்ஞயா

ஓம் சகஸ்ராரா
 

இதை கூறி முடித்த பிறகு முதுகு தண்டுவடம் வழியாக குண்டலினி சக்தியை ஆரோகணம் செய்து சகஸ்ராரா சக்கரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

 

 

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved