🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சரித்திரத்தின் எல்லா பக்கமும் கலைஞரின் சாதனை!

தலைப்போ கலைஞர் நூற்றாண்டு விழா கட்டுரை…

கலைஞருக்கு கட்டுரையா?

கலைஞரே ஒரு கட்டுரை…

கலைஞரே ஒரு கவிதை…

கலைஞரே ஒரு காவியம்…

இந்த காவிய தலைவனை ஒரு சிறு கட்டுரையில் அடக்கிவிட முடியுமா?

அவருடைய பொதுவாழ்க்கை ஒரு சாதனை அல்ல…

அது ஒரு சரித்திரம்…

ஒரு சாதாரண மனிதன் கூட சாதனை படைக்கலாம் ஆனால் அவரோ ஒரு ஞானி ஆகவே தான் அவரை நான் சரித்திரம் படைத்தவர் என்றேன். எதோ அவரை நான் மிகைப்படுத்து கூறுகிறேன் என்று ஐயம் உங்களுக்கு வரலாம். அது உங்கள் கற்பனை. அவரின் பொதுவாழ்வில் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை உங்களுக்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் இன்று இருக்கும் தலைவர்கள் மற்றும் மறைந்த தலைவர்களிலேயே பொது வாழ்க்கைக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்து கொண்டவர் தலைவர் கலைஞர் மட்டுமே…

அது மட்டுமா அவர் ஒரு சமூகநீதி காவலன். இன்று இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் 69% (சதவீதம்) இடஒதுக்கீடு உள்ளது. அதை பெற்று தந்ததும் அவர் தான். மற்ற மாநிலங்களில் அது 50% (சதவீதம்) மட்டுமே வழங்கபடுகிறது.

கல்வி, அரசு நிறுவனங்களில் பணி அதில் மட்டுமே அவரின் சமூகநீதி பிரதிபலிக்கவில்லை மாறாக அது அனைத்து துறைகளிலும் பிரதிபலித்தது. அரசியலில் இன்று அனைத்து சமுதாய மக்களும் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடின்றி உயர்பதவிகளுக்கு வர அவரே காரணம்.

பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை பெற்று தந்ததும் அவரே. பெண்களுக்கு சொத்துல் சம உரிமை வழங்கி அரசாணை பிற்பித்தவரும் அவரே.

தமிழ்நாட்டில் காமராஜர் அதிகமாக அணைகளை கட்டினார் என்றாலும் அவரை போல் கலைஞரும் பல அணைகளை கட்டியுள்ளார். கலைஞர் கலை துறைக்கு ஆற்றிய பணி ஏராளம். அவர் எழுத்து துறையில் ஒரு முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார். அந்த மன்னனின் கீரிடத்தில் உள்ள ஒரு மாணிக்கமே பராசக்தி

பொதுவாழ்வில் அவர் ஒரு தியாகி சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டில் அவர் ஒரு வள்ளல், பெண் உரிமை காவலன், இயற்கை வளங்களை காப்பதில் அவர் ஒரு தீர்க்கதரிசி, கலை துறையின் மார்க்கண்டேயன். கவிதைகள், கட்டுரைகள் மூலம் என்றுமே அவர் அழியாத மார்க்கண்டேயன் தான்.

அவர் எழுதிய புத்தகங்களை வைக்க ஒரு நூலகமே கட்டலாம். நம் அனைவரின் வாழ்க்கையும் ஒளியேற்ற ஒய்வில்லாமல் உழைத்தும் ஒரு பேனா தான் – (கலைஞர்) 

கலைஞர் எழுதிய பேனாக்களில் நானும் ஒரு பேனா தான்!

இன்று தமிழக அரசு தலைவர் கலைஞருக்கு அவர் உறங்கிக்கொண்டிருக்கும் மெரினாவில் சிலை அமைப்பது பாராட்டுக்குரியது.


இப்படிக்கு

J.மோகனசுந்தரம்,
மாச்சேகவுண்டன்பாளையம்,
ஈச்சனாரி,
கோவை – 641021.
கைப்பேசி : 9944208889
மின்னஞ்சல் : mohanjayabal24@gmail.com

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved