🔴 LIVE | முப்பெரும் விழா 2023


என்ன படிக்கலாம்? எதிர்காலம் எப்படி? பேரா.கெ.நாகராஜன் ஆலோசனை!

அன்பு சொந்தங்களே வணக்கம்!

இந்த வார பதிவில் +2 வகுப்பு முடித்த மாணவ , மாணவிகள் எந்த படிப்பு படித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை பற்றி புரிந்து கொள்வோம்.

இன்று விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் படிப்புகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் எதை படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக +2 அறிவியல் பாடப்பிரிவு படித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டதுறை, விவசாய துறை, அறிவியல் பாடங்களாகிய இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினியியல் மற்றும்   நுண்ணுயிரியல் என்னும் பாடங்களையே  தேர்வு செய்வர். பொறியியல் என்றால் அதில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. 

உதாரணமாக, எந்திரவியல் (Mechanical engineering) கட்டடவியல் ( Civil Engineering) மற்றும் மிண்ணியல் (Electronic Engineering)  இதில் பல பிரிவுகள் உள்ளன அதாவது Electronic communication Engineering, Electrical and Electronics Engineering, Electronic Instrumentation Engineering, Bio informative Engineering, computer Engineering, information technology, Marine Engineering, Aeronautical Engineering and Bio medical Engineering என பலவாறாக மாற்றம் அடைந்து இன்றைய தேவைக்கேற்ப வளர்ச்சி கண்டு வருகிறது. மருத்துவத்தில் அடிப்படையில் ஒரே படிப்புதான்   M.B.B.S. பின்னர் தேவைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களை தனித்துவமான துறையில் நிபுணத்துவம் பெற மேற்படிப்பு படிக்க வேண்டும். மருத்துவத்தில் துணை மருத்துவப் படிப்புகளாகிய Diploma Nursing, B S.c., Nursing, B.farm, B.V.Sc., BHMS, ஆயுர்வேதம் மற்றும் ரேடியாலாஜி என பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன.

விவசாய படிப்புகளும் இன்றைய காலகட்டத்தில் முக்கிய த்துவம் பெற்று வருகிறது காரணம் மதிப்பு கூட்டு பொருட்களாக விவசாய பொருட்கள் மாற்றம் அடைந்து வருகிறது. மேலும் விவசாய உபகரணங்கள் மற்றும் நீர் பாசன கருவிகள் பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. நீர் மேம்பாடு, அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி என பல்வேறு கட்டங்களில் மேம்பாடு அடைந்து வருகிறது. இதில் நிபுணத்துவம் பெறுவது கிராம அளவில் உள்ள வேலைவாய்ப்புகளை பெற்று தரும். 

சட்ட வல்லுநர்களாக தங்களை தயார் செய்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் எதில் நிபுணத்துவம் பெற விரும்புகின்றீர்களோ அதில் ஆர்வம் உள்ளவர்களாக உங்களை உயர்த்துதல் அவசியம். 

இன்றைய காலகட்டத்தில், தொடர்பு சாதனங்கள் மற்றும் கணனி சாதனங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. எனவே அதிக வேலை வாய்ப்பை பெற்று தருவது Electronic communication Engineering and Computer Science Engineering மற்றும் இதனைச் சார்ந்த படிப்புகளே ஆகும். ஆனால் , ஒருவர் வெற்றி அடைய அவருக்கு பிடித்த அல்லது விருப்பமான பாடத்தையே தேர்வு செய்ய வேண்டும். 

அறிவியல் பாடப்பிரிவுகளில் என்றும் முதல் இடத்தில் இருப்பது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், நுண்ணுயிரியலே ஆகும். இவற்றில் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். கலை பாடப்பிரிவுகளில் B.A corporate Secretaryship , B.Com, B.A Economics, B.S.c., .Statistics, B.A. media Technology, B.Sc. Psychology, BBA logistics , B.A. Social Science,  fashion technology etc.

எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் ஆர்வத்துடன் படித்து வெற்றி பெறுவது உங்கள் தனிப்பட்ட உழைப்பு, மற்றும் நாட்டமும் தானே அன்றி பிறர் தூண்டுதல்கள் அன்று என்பதை மனதில் நினைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் எந்த துறையிலும் நீங்கள் சாதிக்கலாம்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து அதில் நிபுணத்துவம் அடைய வேண்டும். தற்சமயம் அதிக ஈர்ப்பு உள்ள பாடங்கள் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மற்றும்  புள்ளியியல் ( Data Science) . உங்கள் வசதி மற்றும் சூழ்நிலை க்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்! இன்றைய காலகட்டத்தில் எல்லா துறையிலும் பயின்றவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெறுவது உறுதி. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். வாழ்க வளமோடு!

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved