🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 34

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -பகுதி-34

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

சென்ற வார பதிவில் +2 வகுப்பு முடித்த மாணவ , மாணவிகள் எந்த படிப்பு படித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை பற்றி பார்த்தோம். நாம் கற்கவேண்டிய பாடங்கள் இன்னும் அதிகம். இன்று ஒவ்வொரு துறையிலும் பயின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

நாம் நம்மை ஒரு துறையில் தக்க வைத்துக் கொள்ள மற்றும் நிபுணத்துவம் பெற நமது படிப்புக்கு பின்னர் குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் கழித்துதான் சிறந்த அனுபவம் உண்டாகும். ஆனால், இன்று இன்றைய பாடம் நாளை காலாவதி ஆகிவிடுகிறது. எனவே, தொடர் கற்றல் மற்றும் பல்துறை சார்ந்த அறிவு ஆகியவை அவசியம்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி உங்களை ஓரளவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அறியாமை என்ற இருட்டை போக்கும் வகையிலும் இருக்கும் என நம்புகிறேன்.

இந்த வாரம் அணுக்கரு ஆற்றல் எவ்வாறு உண்டாகிறது என்பதைப் பற்றி சிந்திப்போம். இந்த பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு ஆற்றல்களால் நிரம்பியுள்ளது என்பதைப் பற்றி சென்ற வாரம் சிந்தித்து வந்தோம். இதில் பிரதான ஒளி ஆற்றல் நமது அண்டத்திற்கு சூரியனிடமிருந்து உண்டாகிறது. இதற்கு சூரிய ஆற்றல் என்று பெயர். இதில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று கூடி ,அதைவிட அடர்த்தி அதிகம் கொண்ட ஹீலியம் அணுங்களாக மாறும் போது அதிக ஆற்றலை உமிழும், இதற்கு பெயர் புரோட்டான் - புரோட்டான் சுழற்சி என்று பெயர். இது அணுக்கரு உட்கவருதல் (Nuclear fusion) தன்மையால் நடைபெறுகிறது. அணுவெண் அதிகம் உள்ள அணுக்கள் ஒன்று கூடி மேலும் இந்த சுழற்சி கார்பன் – நைட்ரஜன் சுழற்சி என விரிவடைந்து தொடர்ந்து வெப்ப ஆற்றலாக மாறி பூமியையும் மற்ற பாகங்களுக்கும் சென்று அடைகிறது. இந்த முறையில் வரும் ஆற்றல் மாசு அற்ற ஆற்றலாக பார்க்கப்படுகிறது. 

இதே அணு உட்கருவை பிளந்து  வரும் ஆற்றல் அணுவுட்கரு ஆற்றலாக பார்க்கப்படுகிறது. இதற்கு பெயர் (Nuclear Energy) என அழைக்கப்படுகிறது. இதிலே மூன்று விதமான செயல்பாடு உண்டு. அதாவது அணுவை பிளக்கும் போது வெளிவரும் நீயூட்ரான்களின் எண்ணிக்கை பொறுத்து வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு பிளவிளும் மூன்று நீயூட்ரான்கள் வரும், அவை தொடர்ந்து அடுத்த அடுத்த உள்ள அணுக்களில் உராய்வு ஏற்படுத்தி மீண்டும் ஒவ்வொரு நீயூட்ரானும்  மூன்று புதிய நீயூட்ரான்களை உண்டு பண்ணும், இதற்குப் பெயர்தான் "செயின் ரியாக்ஷன்". இவை கட்டுபடுத்த கூடிய செயின் ரியாக்ஷனாக இருக்கும் போது அணுக்கரு ஆற்றல் உருவாகிறது. இவை கட்டுபடுத்த முடியாத நிலைக்கு செல்லும் போது அணுகுண்டு ஆக வெடிக்கும். குறைவான நீயூட்ரான்களை வெளிவிடும் போது எந்த ஒரு விணையும் புரியாமல் இருக்கும். அதாவது Critical, Super Critical and Sub Critical என மூன்று நிலைகளில் அணு உட்கரு சிதைவு நடக்கும். இதில் Critical Chain Reaction மட்டுமே நாம் விரும்பும் அணு ஆற்றலாக வெளிவந்து மாசு இல்லாத மின்னாற்றல் ஆக பயன்பாட்டில் உள்ளது. இவை தமிழ் நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு ஆராய்ச்சி உலைகள் மூலம் நமக்கு தேவையான மின்னாற்றலை பெற்று தருகிறது.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். வாழ்க வளமோடு!
என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved