🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் -தொடர் 35

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

சென்ற வார பதிவில் அணு உட்கருவை பிளந்து வரும் ஆற்றலை எப்படி நமது பயன்பாட்டுக்கு அணுமின் நிலையங்கள் மூலம் பெறுவது என்பதைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டோம். நாம் பொருள் செலவு செய்து அணுமின் நிலையத்தில் நடைபெறும் அணு பிளக்கும் போது வெளி வரும் ஆற்றலை நேரில் சென்று பார்க்க முடியாது எனவே இந்த பதிவில் அந்த அணுக்கரு உலை எப்படி செயல்படுகிறது என்பதை சில புகைப்படங்கள் மூலம் தங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.

அதற்கு முன் அணு பிளவு பற்றி முதலில் உலகிற்கு அறிவித்தவர் ஆட்டோ ஹான் (Otto Hahn) என்ற விஞ்ஞானி தான். இவர் ஜெர்மன் நாட்டை சார்ந்தவர்.  கடந்த 1938 ஆம் ஆண்டு நீயூட்ரானை கொண்டு யுரேனியம் என்ற அணுவை பிளந்து பேரியம் மற்றும் கிரிப்டான் என்ற அணுக்கள் மூன்று நீயூட்ரான்களின் எண்ணிக்கையுடனும் 200 MeV ஆற்றல் உடனும் வெளியாவதை தனது அணு மோதல் சோதனை மூலம் உலகிற்கு அறிவித்தவர். இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு 1944 இல் வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நீள்ஸ் போர் ( Neil’s Bohr) என்ற விஞ்ஞானி மூலம் முதல் அணுகுண்டை அமெரிக்கா தயாரித்து ஜெர்மன் தயாரிப்பதற்கு முன்னதாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு ஜப்பான் நகரங்கள் மீது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி ஜெர்மனியை போரில் வென்றது இது வரலாறு.


இந்த பேரழிவை உண்டு பண்ணியது விஞ்ஞானம் தான். இதே அணு பிளவை பயன்படுத்தி இன்று உலக நாடுகள் அனைத்தும் சுத்தமான ஆற்றல் என்று சொல்லக்கூடிய (Clean Energy) அணு ஆற்றல் மூலம் தங்களது மின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. விஞ்ஞானத்தின் மூலம் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அணு ஆராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

அணு ஆற்றலை மிகவும் லாவகமாக பயன்படுத்தி இந்தியாவில் 30 சதவீத மின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது அணு ஆராய்ச்சி உலைகள். இவை பல்வேறு உட்பிரிவுகள், வடிவமைப்பு, மின்உற்பத்தி திறன் மற்றும் ஆராய்ச்சி உலைகள் என பல வாராக விரிவடைந்து வருகிறது.

இந்த அணு உலை எப்படி மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது என்பதை கீலே கொடுக்க பட்டுள்ள புகைப்படம்-1 மூலமும், அணுப்பிளவு  எப்படி உண்டாகிறது என்பதைப் புகைப்படம் -2 மூலமும் அறிந்து கொள்ளலாம்.நன்றி.



மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். வாழ்க வளமோடு!

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved