🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும்-மெய்ஞானமும் - பகுதி 40

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -பகுதி-41

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வார விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் நாம் சிந்திக்க இருப்பது நம்மை மட்டும் அல்லாமல் உலகையே உற்று நோக்கி பார்க்க வைத்திருக்கும் சந்திராயன் -3ஐ பற்றி தான்.

இதிலே என்னை மிகவும் ஈர்த்தது ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, மிகவும் சுமாரான மதிப்பெண் பெரும் மாணவனாக இருந்து, தனது தொழில்நுட்ப படிப்பால் உந்துதல் அடைந்து, அதன் பிறகு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பயின்று, பின்னர் தன்னை இந்திய விண்வெளி  ஆராய்ச்சி மையத்தில் இணைத்துக்கொண்டு அதன்  பின் தொழில்நுட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, சந்திராயன் -3ன் திட்ட இயக்குனராக தன்னை உயர்த்திக் கொண்ட ஒரு தமிழ் மகன் வீரமுத்துவேல் பற்றி தான். 

நமது சொந்தங்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், நீங்கள் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் உங்களை வெற்றிக்கு இழுத்து செல்வது உங்களின் ஆர்வமும், அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் திறனும் மட்டுமே என்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். 

நீங்கள் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது எண்ணிலடங்கா விடை தெரியாத வினாக்கள் உங்கள் முன் நிற்கும், அதனைக் கண்டு பயப்படாமல் நமது நோக்கத்தை அல்லது இலக்கை இறுதி செய்து கொண்டு தொடர் முயற்சி செய்தால் வெற்றி உண்டு என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியா இன்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் முதலில் உள்ளது. இருப்பினும் முற்றிலும் வளர்ந்த  நாடுகள் வரிசையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து கையெடுத்துக் கொண்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதில் ஒரு பகுதியே நிலவுக்கு செயற்கை கோள்கள் அனுப்புவது. வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ், சீனா வரிசையில் நிலவுக்கு வின்கலன்களை அனுப்பி ஆய்வு செய்த நான்காவது நாடு என்ற நிலையை அடைந்து உள்ளோம். இது பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. 


சந்திராயன் -3 நிழல் படம்.

இந்த மாதம் 14 ஆம் நாள் இந்திய விண்வெளி உந்துதளத்தில் இருந்து நிலவை நோக்கி அனுப்பியுள்ள சந்திராயன் ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி நிலவை அடைந்து தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நோக்கம் என்ன? எதற்காக இவ்வளவு பொருள் செலவு செய்து (645 கோடி) விண்கலன்களை இந்தியா அனுப்புகிறது என்பதைப் பற்றி அடுத்த வாரம் சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி,
கோயமுத்தூர் -14.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved