🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 42

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்தவாரமும் நாம்  நமது விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில்  சிந்திக்க இருப்பது நம்மை மட்டும் அல்லாமல் உலகையே உற்று நோக்கி பார்க்க வைத்திருக்கும் சந்திராயன் -3ஐ பற்றி தான்.

இந்த சந்திராயன் -3 வரும் ஆகஸ்டு மாதம் 23 ஆம் நாள் நிலவில் தனது ரோவரை இலகுவாக தரையிறக்குதல் செய்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த தருணத்திற்க்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் இரவு பகலாக இயங்கி கொண்டு வருகிறது.

சந்திரயான்-3 திட்டமிட்டபடி 2023 சூலை 14, உள்ளூர் நேரம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் முதல் கட்டமாக, 100 கிமீ வட்ட வடிவ வட்டணையில் நிலாவுக்கான நுழைவு வெற்றிகரமாக முடிந்தது. தரையிறங்கியும், தரையூர்தியும் 2023 ஆகஸ்டு 23 அன்று நிலாவின் தென் முனைப் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 திட்டம் இசுரோவின் எதிர்கால கோளிடைப் பயணத் திட்டங்களுக்கான முதல் படியேற்றமாகும். இதன் முதன்மை எண்ணக்கரு திட்டத்தில் அடைய முடியாத மென்தறையிறக்கத் திறமையை நிறுவும் தொழில்நுட்பச் செயல்விளக்கமாகும்.          

செலுத்துகலம் தரையிறங்கியோடு சேப்(SHAPE) எனும் ஆய்வுக் கருவியையும் உடன் கொண்டுசெல்கிறது. இது நிலா வட்டணையில் இருந்து வாழ்தகவு புவியின் கதிர் நிரல்களையும், முனைமை வரைவையும் பதிவு செய்யவல்ல கதிர்நிரல் முனைமையளவியாகும். தரை இறக்கம் செய்யப்பட உள்ள லேண்டர் மற்றும் ரோவர் இவைகளின் புகைப்படங்களை கீழே காணலாம்.

தரையிறங்கியையும் தரையூர்தியையும் ~100 x 100 கிமீ இறக்கல் தொலைவு வரை கொண்டுசெல்லல். பிறகு, செய்முறை அறிவியல் கருவிகளை 3 முதல் 6 மாதங்களுக்கு இயக்குதல்.  100 க கொண்டுசெல்லல். இந்த விண்வெளி சாதனத்தின் மொத்த எடை 3900 கி.கி. செலுத்து பெட்டகம் 2148 கி.கி. தரையிறங்கி விக்ரம் 1752 கி.கி. , பிரதியின் 26 கி.கி. ஆக மொத்தம் 3900 கி.கி. திறன் அளவீடு, செலுத்தும் ஒட்டகம் 758 வாட், தரையிறங்கி 738 வாட் மற்றும் தரஐயஊர்தஇ 50 வாட்.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

நன்றி.
என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved