🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 44

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 45

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

வெற்றி! வெற்றி! வெற்றி! சாதித்த  இஸ்ரோ விஞ்ஞான குழுவிற்கு நாமும் வாழ்த்தினை தெரிவிப்போம். சந்திராயன்-3 இன் மூலம், நம் இந்திய திருநாட்டின் மதிப்பு உலக நாடுகளிடையே உயர்ந்துள்ளது மட்டுமன்றி, நிலவுக்கு விண்கலங்களை அனுப்பிய நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த நான்காவது நாடு மற்றும் தென் துருவத்தில் விண்கலனை அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையையும் பெற்று தந்துள்ளது.

சந்திராயன் -3 இன் பயணம் அழகான வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான, துல்லியமாக கணக்கிடப்பட்ட பயணம் என்பதை பார்த்து உலகமும் நாமும் வியப்பு கொண்டுள்ளோம். பூமியில் இருந்து சுமார் நான்கு லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ஒரு துணைக்கோளுக்கு விண்கலனை அனுப்பி பூமியில் இருந்தபடியே ஆராய்ச்சியை முடிக்கி விடுவதைக் கண்டு யாராலும் வியக்காமல் இருக்க முடியாது. விஞ்ஞானம் என்பது மிக துள்ளியமானது. ஆனால் எனக்கு என்னவோ மெய்ஞானமும் மிகத் துல்லியமாக செயல்பட்டு உள்ளது என்பதை அறியும் பொழுது எப்படி விஞ்ஞானம் வளர்ச்சி இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கை நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணக்கிட்டு நமக்கு பஞ்சாங்கம் என்ற ஒரு ஒப்பீட்டு புத்தகத்தை வழிகாட்டியாகத் தந்து உள்ளனர். ஆச்சரியம் அல்லவா? 


இந்த நாள் இவ்வளவு நேரம் பௌர்ணமி, இவ்வளவு நேரம் அமாவாசை, நாட்களின் எண்ணிக்கை, கிரகங்களின் அமைவு மற்றும் அதன் தொடர் நகர்வுகள் பற்றி அவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு முகூர்த்தம் மற்றும் ஹோரை ஆகியவற்றை கணித்து தந்துள்ளனர். இதற்கு அந்த சமயத்தில் வானியல் சாஸ்திரம் என்று பெயரிட்டுள்ளனர். இதில் இந்தியர்கள் முன்னோடிகளாக கிரேக்கர்களுக்கு அடுத்த படியாக திகழ்ந்து உள்ளனர். 

இன்றோ ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்ட கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு நமது கலாச்சாரம், பண்பாடு பற்றி மற்றும் நமது மெய்ஞானம் எப்படி நமது கலாச்சாரத்தை செலுமையாக வைத்துள்ளது பற்றி அதிக ஞானம் இல்லை. உதாரணமாக நமது முன்னோர்கள் கூறியுள்ள கிரக நகர்வுகளை நமது சந்திராயன் -3 தனது புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளது. அதாவது செவ்வாய் கிரகமும், சந்திர கிரகமும் அருகே அருகே அமைந்துள்ளதை உறுதி  செய்துள்ளது. சந்திராயன் -3 நிலவில் தடம் பதித்த நேரத்தில் நமது பஞ்சாங்க விதிப்படி கோள்கள் சஞ்சாரமும் இதுவும் ஒத்துப் போகின்றன.  கீழே உள்ள சந்திராயன் -3ன் புகைப்படம் உறுதி செய்கிறது. இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் மெய்ஞானத்தில் இருந்து விஞ்ஞானம் வந்ததா அல்லது விஞ்ஞானத்தில் இருந்து மெய்ஞானமா? வாருங்கள் அடுத்த வாரம் சிந்திப்போம். நன்றி.

சந்திரயான் இன்று அதிகாலை எடுத்த படம் இது, வியப்பு என்னவென்றால், சந்திரனுக்கு அருகில் இருக்கும், சிகப்பாக இருக்கும் (பந்து போல) கோள்தான், செவ்வாய், இதிலென்ன ஆச்சர்யம் என நினைக்கலாம்.

நேற்றைய கோச்சாரத்தில் (நிகழும் பஞ்சாங்க கிரஹச்சாரத்க்கட்டத்தில்) சந்திரனும், செவ்வாயும் ஒன்றாக உள்ளது.

என்றும் அன்புடன் உங்கள்,
கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved