🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - பகுதி 45

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 45

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரமும் நம்மையெல்லாம் பெருமைக்கு இட்டுச் சென்ற சந்திராயன் -3ஐப் பற்றிதான் அறியவுள்ளோம்‌. இன்று இந்தியாவின் சாதனை உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாராட்டப்படுகிறது மற்றும் பாராட்டப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி உச்சியை தொட்டுள்ளது இதனை உறுதி செய்யும் வகையில் ஆதித்தயா-1 என்ற விண்கலத்தையும் ஏவி வெற்றி வாகை சூடி உள்ளது இஸ்ரோ. இது உள்ளபடியே நம் இந்தியர் அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியான தருணம். உலக கவிஞர் பாரதி கண்ட கனவு மற்றும் நமது முன்னாள் விஞ்ஞானி மற்றும் மேதகு ஜனாதிபதி அவர்கள் கண்ட கனவு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரி, இதனால் சாதாரண மனிதனுக்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உண்மை, இதில் சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் எரி சக்தி உற்பத்தி செய்யும் மூலப்பொருள் கண்டுபிடிப்பு அடங்கியுள்ளது. நிலவில் ஹைட்ரஜன் வாயுக்கள் அதிக அளவில் இருக்குமேயானால் அதன்மூலம் பேட்டரிகள் தயாரிக்க முடியும். மற்ற கனிமங்கள் லித்தியம், சிலிக்கான், இரும்பு, மாங்கனீசு போன்ற தாதுக்கள் அதிகமாக இருப்பதால் இதனையும் பயன்படுத்தி கார் பேட்டரிகள், சோலார் பேனல்கள் தயாரிக்க பயன்படுத்தலாம்.


மேலும் வானில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நிலவின் தரையில் இருந்து நமது விண்கலம் விக்ரம் ஆராய்ச்சி செய்யும். பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்து உறுதி செய்யவும், விக்ரம் நிலவுக்கு வெளியில் இருந்து வரும் கதிரியக்க கதிர்களை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும். 

இதைவிட மிகவும் முக்கியமான ஒன்று இந்த பூமியை தவிர வேறெந்த கோளிலாவது மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளதா என்பதை கண்டறியவும், உலகில் பல்வேறு நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டி உள்ளனர். ஆனால் இதற்கான பதில் இன்று வரை யாராலும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் மனிதர்களுக்கு ஒரு ஆசை எப்படியாவது நம்மைப் போன்ற ஒரு உயிரினம் இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது காணமுடியுமா என்ற ஏக்கம் இருப்பதால் அவர்களின் தேடலும் நிற்கவில்லை. 

நேற்றைய தினம் இந்தியாவின் ஆதித்யா-1 சூரியனை நோக்கி அனுப்பப்பட்டது. இது சூரியன் மற்றும்  பூமி ஆகியவற்றின் இடையிலான தூரத்தில் 15 லட்சம் கி.மீ. பயணம் செய்து  L1 என்ற புள்ளியை அடைந்த பின்பு அங்கிருந்து கொண்டு  சூரிய மண்டலத்தின் மேல் பரப்பில்  நிகழும் மாற்றங்களை தனது ஆய்வுகள் மூலம் பூமிக்கு அனுப்பும். இது நமது சூரிய மண்டலத்தின் அறிவை வளர்த்துக் கொள்ள பயன்படும். இதையெல்லாம் நமது முன்னோர்கள் ஏற்கனவே தங்களது மெய்ஞானத்தில் கண்டறிந்து இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளனர். இன்னும் வரும். மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.!

என்றும் அன்புடன் உங்கள்,
கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved