🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 46

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரம் நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் நிகழ்த்திய மற்றுமொரு சாதனையைப் பற்றி சிந்திப்போம்.  இன்று உலகமே இந்தியாவை நோக்கி உற்றுப் பார்க்க ஆரம்பித்து உள்ளது. நிலவில் முதன் முதலில் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கி, பிரக்யான் என்ற ரோவரை 100 மீ சுற்றளவு நிலவின் பரப்பில் ஆய்வு செய்து, நிலவில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் உள்ளன என்பதை இந்த உலகிற்கு முதலில் உணர்த்தியது ‌இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி என்பதே இங்கு பெருமை.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவுக்கு விண்கலனை அனுப்பிய போதும் இதுவரை மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா இல்லையா என்பதை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்தியா அனுப்பிய சந்திராயன் -1 நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. பின்னர் அனுப்பிய சந்திராயன் -3ன் ரோவர் அதை உறுதி செய்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்பில் கனிமங்கள் அதிகம் இருப்பதாகவும் அவற்றின் அடர்த்தியால் நிலவின் மேற்பரப்பில் வெப்பம் 123° செல்சியஸ் ஆகவும், அதன் அடியில் சுமார் 10 சென்டிமீட்டர் அளவில் வெப்பம் மைனஸ்-233°செல்சியஸ் ஆகவும் இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது. இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. இதனை தொடர்ந்து அங்கு மனிதர்கள் வாழ சாத்திய கூறுகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இன்னும் ஐம்பது ஆண்டுகளில் மனிதர்கள் தங்கள் சந்ததியினரை நிலவில் உருவாக்க வாய்ப்புள்ளது. சுமார் நூறு ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு கிடைத்த பெரிய வெற்றி இது. இது இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.

மற்றுமொரு சாதனையாக ஆதித்யா -1 என்ற விண்கலத்தை சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியுள்ளது. இதுவும் ஒரு புதிய கோணத்தில் இருந்து சூரியனைப் பற்றி தகவல் சேகரிப்பதாகும். தனது சுய பிம்பம் (செல்ஃபி) மற்றும் பூமி, நிலவை விண்வெளியில் இருந்து நமக்கு புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதன் புகைப்படம் இங்கே உங்கள் பார்வைக்கு.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்!

என்றும் அன்புடன் உங்கள்,
கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ..கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved