🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 47

கடந்த ஐந்து வாரங்களுக்கு மேல் நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி பார்த்தோம்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி தொடர்ந்து 48 வாரங்களை கடந்து 52 வது வாரத்தை நோக்கி அதாவது முதலாம் ஆண்டு நிறைவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

விஞ்ஞான அறிவு என்பது புற உலகில் உள்ள பொருட்கள் மற்றும் உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் தன்மையை அறிதல். இதற்கு சில கோட்பாடுகள் மற்றும் விதிகள் உள்ளன. ஆனால் மெய்ஞான அறிவு என்பது அப்படி அல்ல. ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டிய ஒரு பொதுவான உண்மை. 

உதாரணமாக, நமது உடம்பை எடுத்துக் கொண்டால் அதில் இருக்க கூடிய உறுப்புகள், செயல்பாடுகள் அனைத்தும் அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு சில உறுப்புகள் சரியாக வேலை செய்வது இல்லை. இதற்கு காரணம் என தேடும் பொழுது, குறைபாடு என பொதுவாக கூறிவிட்டு கடந்து விடமுடியாது. இங்கேதான் மெய்ஞானம் வேலை செய்கிறது. இங்கேதான் பிரபஞ்ச சக்தி வேலை செய்கிறது. 

அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றியது முதல் இன்றுவரை அது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அல்லது விதியின் அடிப்படையில் செயல்பட்டு கொண்டு வருகிறது. அது நாகராஜன் என்பவருக்கோ அல்லது லட்சுமி என்பவருக்கோ சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படுவதில்லை. ஓரிடத்தில் உங்களுக்கு வெயில் என்றால் எனக்கும் வெயில். உங்களுக்கு மழை என்றால் எனக்கும் மழை, உங்களுக்கு காற்று என்றால் எனக்கும் காற்று, என எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியான வெளிப்பாடு கொண்டிருக்கும். ஆனால், மனிதர்கள் அப்படி அல்ல தன்னுடன் இருப்பவர்களிடம் ஒரு மாதிரியும் பிறரோடு வேறு மாதிரியும் தங்களை மாற்றிக் கொண்டு வாழ்கின்றனர். இதுதான் மனிதர்களை, பிரபஞ்ச சக்தியில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அங்கேதான் அதர்மம் தலை தூக்குகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை எல்லாரும் ஒரே நிலையில் உணர்வது இல்லை. அவரவர் ஊழ்வினை பொறுத்து வேறுபடும். இங்கேதான் மெய்ஞானம் வேலை செய்கிறது. அப்பொழுது ஊழ்வினை என்பது என்ன அது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி விஞ்ஞானத்திற்கு தெரியாது. ஆனால் மெய்ஞானம் அதைப்பற்றி விலாவாரியாக சொல்லி உள்ளது. வாருங்கள் அடுத்த வாரம் சிந்திப்போம்.

நன்றி.

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved