🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - பகுதி 50

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 51

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

சென்ற வாரம் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் ஊழ்வினை பற்றி சிந்தித்து கொண்டு வந்தோம். நீங்கள் அனைவரும் ஒரு கேள்வி கேட்கலாம் இந்த அவசரமான உலகத்திலே இது எல்லாம் சாத்தியமா என்று. நான் முன்னரே கூறியது போல யுகங்கள் நான்கு வகைகளாக உள்ளது கிருதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் கலியுகம்.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு செயல்பாடு ஓங்கி இருந்து உள்ளது. கிருதா யுகத்தில் மனிதர்கள், ரிசிகள், தபஸிகள் கற்பகோடி ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து உள்ளனர். அது போலவே திரேதா யுகம், துவாபர யுகத்திலும் மனிதர்களின் ஆயுட் காலம் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளது. ஆனால் கலியுகத்தில் இது 120 வருடங்களாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் மனிதர்களின் செயல்பாடுகள் மிகவும் கேடு தருபவனாக அதிகரிக்க கூடும் என்பதனாலே. 

இந்த பூமியில் ஒருவர் சிறப்புடன் வாழ அவருக்கு அன்பு, கருணை, இரக்கம், பணிவு, துணிவு, நேர்மறை எண்ணம் ஆகியவைகள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், இந்த கலியுகத்தில் இவையாவும் இருக்காது. ஏனெனில் மனிதர்கள் இறை சக்தியிலிருந்து  வெகு தொலைவில் வந்து விட்டார்கள். இறை சக்தியுடன் வாழும் மனிதர்களுக்கு மட்டுமே மேற்சொன்ன சிறப்புகள் இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு இது இருக்காது, எனவே, அவர்களது குணங்களும் இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு மாறுபடும். இப்படி மாறுபடுவதால் நம்பக தன்மை ஒருவருக்கொருவர் இருக்காது அல்லது மறைந்து போகும். இதன் விளைவே இன்று விஞ்ஞானம் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு நிறுவனமும் வெப் கேமிராக்கள் மூலம் மனித செயல்பாடுகளை கண்காணிக்கிறது. 

உறவுகளுக்குள் விரிசல்கள், நன்னடத்தையில் மாற்றங்கள். நாடாளும் தலைவர்களிடத்தும் நேர்மை என்பது இல்லாமல் குன்றிப் போனது. இதுவே வெகு ஜனங்களிடம் மிகவும் அரிதாகிப் போனது. இன்று வாழ்க்கை மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது. இதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும் என்றால் நம்மிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வ நம்பிக்கை, பெரியோர்களை மதித்தல், நேர்மறை எண்ணங்கள் போன்றவை அதிகம் வளர வேண்டும்.

இதற்கு மெய்ஞானம் வளர வேண்டும். வாருங்கள் சிந்திப்போம். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.‌ 

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved