🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-2

ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது!

வன்னியர்கள் அரசுவேலைகளின் 1 இலட்சபேரும், நிறுவனங்களில் 1 இலட்சம் பேரும் இருப்பதாக மருத்துவர் இராமதாசு எழுதிய “சுக்கா மிளகா சமூகநீதி” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது. அதாவது மொத்த மாநில அரசு வேலை மற்றும் நிறுவன வேலைகளில் தலா 10 இலட்சத்தில் 10% வன்னியர்கள் இருப்பதை மருத்துவர் தெளிவாக பதிவு செய்துள்ளார். 78% பிற்படுத்தப்பட்டோருக்கு 50%ம்தான் இடஒதுக்கிடு வழங்கப்படுகிறது. 8% இருக்கும் சமூகத்திற்கு 10.5% எப்படி வழங்க முடியும்? 10% மேல் இருக்கும் 68 DNT மக்களை மிக குறைவாக காட்டுவதை எத்தனைகாலம் ஏற்றுக்கொள்ள முடியும்? இம்முறை இதற்கு விடிவு பிறந்தே ஆகவேண்டும்.

வன்னியர்கள் பின்தங்கியுள்ளனர் அதனால் அவர்களுக்கு இது அவசியம். ஒரு சமூகத்தை மட்டும் தனி வகுப்பாக நடத்தலாம். எல்லாம் பொய். அதே அம்பாசங்கர் அறிக்கையில் வன்னியர்கள் சமூக கல்வி அளவுகளில் 15 புள்ளிகள் பெற்று பின்தங்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, தொட்டிய நாயக்கர், கள்ளர், மறவர், வலையர், முத்தரையர் உள்ளிட்ட பல சமூகங்கள் 15 புள்ளிகளே பெற்றுள்ளனர். எனவே ஒரே அளவுகோளில் இருக்கும் சமூகங்களை வேறு வேறு பிரிவுகளில் வைக்க முடியாது.

பதிவு தொடரும்.

தொட்டியநாயக்கர் உள்ளிட்ட  சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமுதாய அமைப்புகள்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved