🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புறக்கணிக்கப்படும் DNT-இட ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-4

உறவினர்களுக்கு வீரவணக்கம்,

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 16.4-இல் கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் அரசில் போதுமான அளவு இல்லாதபோது கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இருப்பினும் 1990ல் தான் மறைந்த பாரதபிரதமர் வி.பி.சிங்கின் சீரிய முயற்சியால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயர் சாதியினர் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பலர் தீக்குளித்தனர். அவருடைய அரசு கவிழ்க்கப்பட்டது.

1991ல் ஆட்சிக்கு வந்த மறைந்த பாரதபிரதமர் நரசிம்மராவ் பொருளாதார அடிப்படையில் முன்னேறிய வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீட்டையும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டையும் செயல்படுத்தினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 1992ல் இந்திராசஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியாக முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும் சமூக கல்வி ரீதியாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 27% இடஒதுக்கீடு செல்லும் என்றும் ஆனால் சாதிவாரி இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

அது தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்தாக இருந்தது. இருப்பினும் அம்மா அரசு துரிதமாக செயல்பட்டு 1993ல் தனி சட்டம் இயற்றி அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் சேர்த்து 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்தது.அது பல சட்டப்போராட்டங்களை கடந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

பதிவு தொடரும்.

திரு.பி.கே. துரைமணி, (8610010230, 9443480852).

சீர்மரபினர் நலச்சங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved