🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்ற தேர்தல் கம்பளத்தாரின் சாதனையும் - சறுக்களும்-2

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சைகளாகக் களம் இறங்கிய சமுதாய வேட்பாளர்கள். இராஜகம்பள சமுதாயம்-நாடார் சமுதாயம் - ஒரு ஒப்பீடு. இந்த தேர்தலில் முதன்முதலாக சுயேட்சைகளாக களம் கண்ட இராஜகம்பள சமுதாய வேட்பாளர்கள் 7 பேரில் யாருமே அதிகபட்சம் 3500 வாக்குகளைக்கூட தாண்டவில்லை. இவர்கள் நின்ற எல்லா தொகுதிகளிலுமே அதிக அளவு கம்பளத்தார் வாக்குகள் இருந்தும் இவர்களின் கதி இதுதான்.  இனத்தாரே இனத்தானுக்கு வாக்களிக்காமல் இனத்தையே பலி கொடுக்கத் துணிந்து விட்டதால் அவர்களுக்கு  இந்த கதி என்பதே பாடம். ஆனால் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை என்ற பெயரில் நாடார் சமுதாயம் சார்பில் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கிய ஹரிநாடார் என்பவர் 37800 வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளார். தமிழக அளவில் களம் கண்ட சுயேட்சை வேட்பாளர்களில் ஹரிநாடாரே அதிக வாக்குகளைக் குவித்த பெருமைக்குரியவர் என நாடார் சமுதாய தினசரி நாளிதழான தினத்தந்தி இன்று புகழாரம் சூட்டியுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திமுகவை விட 3500 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஹரி நாடார் அதிக வாக்குகளைப் பிரித்துவிட்ட காரணத்தாலேயே நாடார் சமுதாயத்தைச் சார்ந்த திமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவியதாக அப்பத்திரிக்கை கருத்து தெரிவித்துள்ளது. அந்த தொகுதிவாழ் நாடார் சமுதாய வேட்பாளர்கள் அரசியல் கட்சியில் உள்ள தங்களது சமுதாயம் சார்ந்த வேட்பாளரை விட சமுதாயம் சார்பாக நிற்கும் சுயேட்சை வேட்பாளரே சமுதாய காவலராக இருப்பார், அவரையே தூக்கி நிறுத்த வேண்டும் என்கிற இன உணர்வோடு தான் ஹரி நாடாருக்கே வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். அதனால் அவர் தேர்தலில் தோற்றாலும் வெற்றி பெற்றவரைப்போல தலை நிமிர்ந்து நிற்கிறார். இனப்பற்றோ இன உணர்வோ இல்லாத சமுதாயத்தை நம்பி களம் இறங்கிய கம்பள சமுதாய வேட்பாளர்களோ தரை தட்டிய கப்பல்களைப் போலத்  தள்ளாடி நிற்கின்றனர். எந்த சமுதாயம் இனப்பற்றும் இன உணர்வும் மிகுந்து வாழ்கிறதோ அந்த சமுதாயம் தலைநிமிர்ந்து வாழும். எந்த சமுதாயத்தில் இன துரோகம் தலை விரித்து ஆடுகிறதோ அந்த சமுதாயம் தலைகவிழ்ந்துதான் நிற்கும். இதுதான் விதி... இயற்கை நியதி... மானுடவியல் தத்துவம்...

வாட்ஸ்அப் செய்தி...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved