🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டியநாயக்கர்களுக்கு புறக்கணிக்கப்படும் DNT-இட ஒதுக்கீடு-பகுதி-7

உறவினர்களுக்கு வீரவணக்கம்,

கடந்த 2018-ல் இதாதே ஆணையம் DNT இறுதிப்பட்டியல் வழங்காமல் ஒரு தற்காலிய பட்டியலை வழங்கி அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளதால், 25.2.2019-ல் மத்திய அரசு முனைவர் ராஜீவ் குமார் (நிதி அயோக்கின் துணை தலைவர்) தலைமையில் ஒரு குழுவை அமைத்து DNT பட்டியலை தயார் செய்ய கோரியுள்ளது. இப்படி நமது இடஒதுக்கீடு இழுத்தடிக்கப்பட்டாலும் 2018-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 338B-ன் கீழ் SC/ST ஆணையங்களுக்கு நிகரான அதிகாரங்களை வழங்கியுள்ளது, தேசிய DNT நலவாரியம் அமைத்ததுள்ளது சற்று ஆறுதலாகவும் மோடி அரசு நமது சமூகங்களை முன்னேறுவதில் அக்கறையோடு இருக்கிறது என்பதை காட்டுவதாகவே உள்ளது.

சமூகநீதி மறுக்கப்படும் மரபுமாறா பூர்வகுடி மக்களுக்கு ஒ.பி.சி உள் ஒதுக்கீடு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. நமது உறவுகள் IIT, IIM, NEET, MS. MD, Ph.D உள்பட பல தரமான உயர்கல்வி பெறுவதற்கும், IAS, IPS, IRS, IFS, Banks, Railways, SSC, Para military Forces என்று மத்திய அரசின் பல வேலைகளுக்கு செல்வதற்கும் வழிவகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு எது எப்படியிருந்தாலும் பலர் பல குழப்பங்களை விளைவித்தாலும் பலர் அல்ப்ப ஆதாயத்திற்காக ஆணிவேரையே அறுத்தாலும் 68 சமூகங்களும் அரசியல் சார்பின்றி ஒற்றுமையோடு ஒ.பி.சி உள் ஒதுக்கீடு பெறும்வரை தொடர்ந்து போராட நாம் அனைவரும் இன்று சூளுரை ஏற்போம். வீரவேல் வெற்றிவேல். விரைவில் வெல்வோம். 

நன்றி...   

சீர்மரபினர் நலச்சங்கம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved