🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று!

வடக்கே இருந்து வீசிய வசந்தக் காற்று!

(1371 முதல் 1810 வரை 440 ஆண்டு கால வரலாற்றுச் சுவடுகள்)

தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சி...

டெல்லி சுல்தான்களிடமிருந்து ஹரிஹரர்  மற்றும் புக்கராயன் ஆகியோர் உயிர் தப்பித்து,  1323-இல் கர்நாடகாவின் விஜயநகரம் பகுதியில் இருந்து விஜயநகர பேரரசு என்ற ஒன்றுபட்ட தென்னிந்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கி டெல்லி சுல்தான்களை வென்று இந்து சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்தார்கள்....

டெல்லி சுல்தான்களிடமிருந்து ஹரிஹரர்  மற்றும் புக்கராயன் ஆகியோர் உயிர் தப்பித்து,  1323-இல் கர்நாடகாவின் விஜயநகரம் பகுதியில் இருந்து விஜயநகர பேரரசு என்ற ஒன்றுபட்ட தென்னிந்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கி டெல்லி சுல்தான்களை வென்று இந்து சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்தார்கள்....

இதன் மூலம் தென்னிந்திய பகுதிகளை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்...

எஞ்சிய தென்னிந்திய டெல்லி சுல்தான் படைகளை ஒன்றாக இணைத்து மதுரை அரசை கட்டமைத்தார்கள் டெல்லி கில்ஜி அரசர்கள்....

இவர்களிடம் இருந்து 1371 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசு மதுரையை போரிட்டு மீட்டது...

மதுரையை மீட்டதற்கு முழு காரணமாக இருந்தவர்கள் புக்கா (புக்கராயர்) மற்றும் அவரது மகன் கம்பனா ஆகியோரே ஆவார்கள்..

இவர்கள் இங்கு மதுரை அரசை கைப்பற்றும் போது நடந்த குடியேற்றங்கள் , அரசியல், சமூக மாற்றங்கள் மற்றும் இங்குள்ள சமுதாயங்கள் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கிறேன்...

இதற்கு உறுதுணையாக நின்ற வள்ளுவன் வாக்கு பலிக்கும் என்பதை போல...

சத்தியமங்கலம், கடம்பூர் மலையில் வாழும்,  வள்ளுவர் சமுதாயத்தைச் சார்ந்த அகத்தியரின் வழி தோன்றல், ஐயா தாடி சாமி அவர்களின் முன்னோர்களின் வரலாற்று ஆய்வுகள் மூலம் விளக்கவுள்ளோம்...

முதலில் வள்ளுவர் சமுதாயம் என்றால் யார்? என்று அறிவோம்..

பின்பு தான் இந்த வரலாற்றினை நாம் முழுவதுமாக உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும்.

திருக்குறள் தந்த வள்ளுவர் பிறந்த சமூகம் .முன் காலத்திய அரசவை புலவர்கள், நாடி ஜோதிடர்கள், நாட்டு வைத்தியர்கள் , ஓலை சுவடிகளை கொண்டு வரலாறுகளையும், சித்த மருத்துவ குறிப்புகளையும் எழுதுவது என இவர்களின் பங்கு மகத்தானது.

இவர்கள் (வள்ளுவர்கள்) கூறும் நாயக்கர் கால வரலாற்றையும், வரலாற்றில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட  நாயக்கர் கால வரலாற்றையும். இன்றைய சந்ததிகளின் வாழ்க்கை முறையில் காணப்படும் எச்சங்களையும் ஒன்று சேர்த்து, எளிய வடிவிலான பதிவுகளின் மூலம் உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். இது நமது சமுதாய வரலாற்றை இன்னும் செம்மைப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். வள்ளுவர்களின் வாய்மொழி வாக்குமூலம் நாயக்கர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு கூடுதல் தகவல் கிடைத்திட வழிவகுக்கும்.

பதிவு - 1

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved