🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்தக் காற்று! – பகுதி-2

தமிழகத்தில் கோவில்களும் வழிபாட்டு முறைகளும்:-

இசுலாமிய படையெடுப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டு, முழுவதுமாகவும் உடைத்தெறியப்பட்டன.

அடித்து, நொறுக்கி சூறையாடப்பட்ட கோவில்களெல்லாம் நாயக்கர்கள் கால ஆட்சியில் ஆகம விதிகளின்படி புதிதாக கட்டப்பட்டது. சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைணவ வழிபாடுகளை விரும்பி வழிபட்டனர்.

இவர்கள் குல கடவுள் வழிபாடு, திருமணம் தவிர்த்து மற்ற வைணவ கோவில்களில் பிராமணர்களுக்கே பூஜை செய்யும் உரிமையை வழங்கினார்கள்.

சைவ கோவில்களில் முதலியார், பிள்ளை மற்றும் சில வேளாளர்கள் உட்பிரிவினர், சைவ செட்டியார் தலைமையில் நிர்வாகம் செயல்பட்டது.

வைணவ பிராமணர்களை கொண்டு வைணவ ஆலயங்களில் செய்யப்படுவது போல சரியான நேரத்தில் பூஜைகள் செய்யப்படாத காரணத்தால், சைவ வழிபாட்டினை மேற்கொண்டு வருபவர்கள் பண்டாரங்களுக்கு (ஆண்டி பண்டாரம்) எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இவர்களை உடனடியாக மாற்றி கர்நாடக பகுதியில் உள்ள சைவ பிராமணர்களை ஆலய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மதுரை நாயக்க மன்னர் சபையில் முறையிட்டினர்.

இதன்படி 14 ஆம் நூற்றாண்டு கால போக்கில் துவக்கி 16 ஆம் நூற்றாண்டு வரையில் 80% கோவில்கள் பிராமணர்களிடம் வழங்கப்பட்டதாகும்.

மேலும் பண்டாரங்களுக்கு சிறு தெய்வ வழிபாடு செய்யும் அனைத்து கோவில் பொறுப்புகளும் அளிக்கப்பட்டன.

ஆண்டிபண்டாரம் இனத்தை சார்ந்தவர்கள் சுல்தான் படையெடுப்பின் போது உயிருக்கு பயந்து சிலைகள் மற்றும் பொன் ஆபரணங்கள் உள்ள இடத்தினையும் கட்டிக்காக்க தவறியதால், இங்குள்ள சைவ குடிகள் அவர்களை மீண்டும் கட்டப்பட்ட புதிய கோவில்களில் அனுமதிக்கவில்லை என்ற செவி வழி செய்தியும் உள்ளது.

இதே சமயத்தில் வள்ளுவரினத்தவரும், கோனாரினத்தவரும் இணைந்தே பழைய தமிழ் ஓலை சுவடிகளையும், சில கடவுள் சிலைகளையும் பானையில் வைத்து மூலிகை செடிகள் மூலம் கரையான் அரிக்காத வண்ணம் புதைத்தும் வைத்தனர்.

பானை மேல் முடியில் பசை போல ஓட்டுவதற்கு வேப்ப மரத்தின் பிசின் பயன்படுத்தப்பட்டுள்ளது...

மேலும் விஜய நகர மன்னர்கள் மிகவும் நேர்த்தியாகவும் அவரசம் இல்லாமல் தெளிவாக திட்டமிட்டு கோவில்களை கட்டியுள்ளார்கள்.

இதற்கு உதாரணமாக, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மண்டபம் கட்ட 37 வருடங்கள் ஆகியுள்ளது. இக்கோயில் திருமலை நாயக்கரை அடுத்துவந்த விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது.

இத்துடன் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான கோவில்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved