🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-3

2.நாயக்கர் கால ஆட்சியில் வேளாண்மையும், நீர் மேலாண்மையும்:
தமிழகத்தில் முதலில் வந்த டெல்லி சுல்தான்களும், கி.பி.1800 க்கு பிறகு ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், இங்குள்ள வேளாண் குடிகளிடமிருந்து தானியங்களை பிடுங்கி வயிறு வளர்த்தார்கள் என்கிறார்கள். 

காரணம், அவர்களுக்கு விவசாயம் செய்ய தெரியாது மற்றும் நம் அடிமை மக்கள் இருக்கும் போது அவர்கள் ஏன் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.

ஆனால், நாயக்க மன்னர்கள், நாம் இங்குள்ள மக்கள் உழைப்பில் தினமும் சாப்பிட்டால் சரியாக இருக்காது, மேலும் நம் படை வீரர்கள் நன்றாக உண்ணக்கூடியவர்கள், அவர்களை உணவு விஷயத்தில் கட்டுப்படுத்த முயன்றால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை உணர்ந்திருந்தனர்.

எனவே, இங்கு உற்பத்தியை பெருக்கி,அதன் மூலம் வரி வருமானத்தையும் பெருக்க விரும்பியே, 72 பாளையங்களாக நிலங்களை பிரித்து அதன் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டனர்.

நீர் பாசனத்திற்கு கிணறுகளை தோண்டி விவசாயம் செய்தனர். அதற்காக போயர் இன மக்களை 72 பாளையங்களையும் உள்ளடக்கிய பல பகுதியில் குடி அமர்த்தினர்.

இன்று போயர் இன மக்கள் வேர்வையும் இரத்தமும் சிந்தாத கிணறுகளே இல்லை என்கிற அளவில் அவர்களின் உழைப்பு தமிழக வளர்ச்சியில் உள்ளது.

கிணறு வெட்டும் பகுதியில் இருந்த கற்கள் கொண்டு கட்டிட பணிகளுக்கும் சிற்ப வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.

ஒரு பாளையத்தில் 15000 ஏக்கரில் விவசாயம் செய்யும் அளவில் இருந்து படிப் படியாக தரிசு நிலங்களை சீர்படுத்தினர்.

நாயக்கர்கள் தென்னிந்திய பகுதிகளை 200 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்ததில், கோதாவரி மற்றும் தஞ்சை டெல்டா பகுதிகளை சொர்க்க பூமியாக கருதினர்.

இங்குள்ள வேளாண் குடிகள் , நம்மை சுல்தான்களிடமிருந்து பாதுகாத்து, கோவில்களை புணரமைத்து , முறையான வரி வருவாய் மற்றும் ஆட்சி நிர்வாகம் செய்வதை கண்டு, விஜய நகர மக்களை தங்களின் குடும்பத்தில் ஒருவரை போலவும், அண்ணன், தம்பி மற்றும் மாமன்,மைத்துனர் என்கிற ரீதியிலும் இங்குள்ள தமிழ் குடிகள், தெலுங்கு மக்களிடம்  மிக உறுதியான பிணைப்புடன் இணைந்து வாழ்ந்தனர்.

மேலும் விஜய நகர மக்கள் இங்கு தங்களின் படைகளிலும், விவசாயப் பணிகளிலும், தங்களுக்கு உறுதுணையாக இருக்க அருந்ததியர் மக்களை பயன்படுத்தினர்.

அம்மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் அவர்களை தனி பகுதிகளில் குடியமர்த்தினர். மனிதர்களிடன் வேற்றுமையை உருவாக்காமல், இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற சமத்துவத்துடன் ஆட்சி செய்தனர்.

ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved