🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக வெற்றிக்கு கைகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள்!-பகுதி-4

தொடர்ச்சி-4

செந்தில்பாலாஜியின் இந்த அணுகுமுறை அதிமுக-வின் அணுகுமுறையின் நீட்சி. இது கொங்குமண்டல திமுக-வின் அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட திமுக-வின் அணுகுமுறை. ஒன்றிய அளவிலான பதவிகளைக்கூட பிற சமூகங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். அதன் பலனை இம்மாவட்டங்களில் இத்தேர்தலில் திமுக அனுபவித்திருக்கிறது. மடத்துக்குளம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு போன்ற சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பினை பிற சமுதாயங்களுக்கு கொடுத்திருந்தாலும், கீழ்மட்ட அளவில் கட்சிப் பொறுப்புகளை பிற சமூகங்களுக்கு வழங்காதது, அவர்களின் வாக்குகளை திமுக விற்கு பெற்றுத்தரவில்லை. உதாரணமாக கிணத்துக்கடவு தொகுதியில் முதல்கட்ட இழுபறிக்குப்பின், ஒருகட்டத்தில் திமுக 9000 வாக்குகள் முன்னிலையில் இருந்தது. கடைசி இரண்டு ரவுண்டு வாக்குஎண்ணிக்கையில் தான் அதிமுக ஆயிரத்து சொச்சம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. அதுவும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் ஏறக்குறைய 4000 வாக்குகளையுள்ள ஆறுமுகக்கவுண்டனூரில் அதிமுக பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது. DNT, இடஒதுக்கீட்டு பிரச்சினையை முன்வைத்து அச்சமூக தலைவர்களை அணுகியிருந்தாலோ அல்லது அதை முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தாலோ வெற்றி சாத்தியப்பட்டிருக்கும்.

இதை ஏதோ போகிற போக்கில் சொல்வதல்ல. நாமக்கல்லை அடுத்து தொட்டிய நாயக்கர் சமூகம் அதிகமுள்ள பகுதிகளில் இடஒதுக்கீடு பிரச்சினையை முன்வத்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இடங்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிகள்.

விளாத்திக்குளம் தொகுதிக்குட்பட்ட புதூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர், இடஒதுக்கீட்டில் கம்பளத்தார்கள் வஞ்சிக்கப்பட்டது பற்றி பேசினார். அங்கே கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒன்றியச் செயலாளராக இருந்தபடியால், DNT, இடஒதுக்கீடு குறித்து தெளிவாக விளக்கி, நோட்டீஸ் அச்சடித்து வீடுதோறும் வழங்கி திமுக வேட்பாளரின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தார். முதுகுளத்தூர் தொகுதிக்குற்பட்ட கமுதி ஒன்றியத்தில் படித்த ஒருசில இளைஞர்கள் உள்ளாட்சிப் பிரதிநிகளோடு இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக குறிப்பிடத்தக்க அளவில் வாக்கின் போக்கை மாற்றியதால் கமுதி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் முன்னிலைபெற உதவியது.

வீ.க.பொ.பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு. அவருக்கு ஆதரவாக அந்த அமைப்பின் தலைவர்கள் அத்தொகுதில் முகாமிட்டு தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டனர். அவர்களின் பிரச்சாரத்தின் மிகமுக்கிய பேசுபொருளாக DNT- ஒற்றைச்சான்றிதழ், இடஒதுக்கீட்டில் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டதை சமுதாய மக்களிடையே திண்ணைப் பிரச்சாரமாக மேற்கொண்டனர். இந்தப்பிரச்சாரத்தின் மூலம் அரசுக்கெதிரான உருவான எதிர்ப்பை திமுக, மதிமுக போன்ற கட்சிகளில் உள்ள தொட்டிய நாயக்கர் சமுதாய பிரதிநிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு வாக்குகளாக மாற்றி, அத்தொகுதியில் பலமான அதிமுக வேட்பாளரை வீழ்த்த உதவினர்.

(இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்…)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved