வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-4

கம்பளத்தார் மக்கள் குலக்கல்வி முறையில் பாடம் பயின்றார்கள்.. இதில் அவர்களுக்கு அவ்வளவு பெரிய ஆர்வம் கிடையாது... பிராமணர், முதலியார், மற்றும் ஆதி தமிழ் குடியான வள்ளுவர், சைவ பிள்ளை மக்களும் கல்வியில் சிறப்பாக கற்று தேர்ந்தனர்...
ஆனால், கம்பளத்து குடி மக்கள் போர் புரிவது, ஏறு தழுவுதல், வீர , சாகசங்கள் புரிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனர்...
ஏட்டுக் கல்வியை விட நாடக நிகழ்ச்சிகளை பார்த்தே அறிவியல் மற்றும் சமூக செயல்பாடுகளை அதிகம் கற்றுக் கொண்டார்கள்...
போர் பயிற்சி 8 வயது முதல் 18 வயதுக்குள் பயில வேண்டும்..ஏனென்றால் பெண் 14 வயதில் பூப்படைந்தவுடன் 17 வயது உள்ள ஆண் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்...
இதே முறையை இங்குள்ள வேளாண் குடிகள், முக்குலத்தோர், குடும்பன், சேர்வை, கோனார் போன்ற சமூக மக்களும் இளையோர் திருமணத்தை நடத்தி உள்ளனர்...
அன்று கல்வி மற்றும் போர் பயற்சிகள் போதிக்கும் ஆசிரியர்களுக்கு உணவு தானியங்களை ஊதியமாக வழங்கினர்.
வண்ணார், விஸ்வகர்மா, ஆசாரி, சிற்பிகள், நெசவு செய்யும் மக்கள், கொல்லர், தச்சர், மண்பாண்ட உடையார், வேடர்கள், தாழ்த்தப்பட்ட ஆதி தமிழ் குடிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களே கொஞ்சம் கல்வி அறிவு பெற்றார்கள் ...
காரணம் கல்வி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டும், அதன் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது...
மூன்று வேலை நல்ல உணவு உண்ணக்கூடிய ஒருவர், மூன்று வேலையும் ஒரு பெண்ணுக்கு உணவு கொடுத்து , பாதுகாப்பு கொடுக்க திறமை இருப்பின் 3 மனைவிகள் வரை திருமணம் செய்ய முடியும்.. இதில் உயர்ந்த குடி, தாழ்ந்தவர்கள் என்கிற பேதம் கிடையாது, அவரவர் சமூகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ய முடியும்...
சிற்பிகள் சில பேரில் மூத்தவர் கட்டாய கல்வி பயில வேண்டும் என்கிற நிலை சில பகுதிகளில் இருந்தது, காரணம் கல்வெட்டுகளில் பெயர் மற்றும் இதர விபரங்களை செதுக்க அவர்களுக்கு இது போன்ற கட்டாய கல்வி முறை இருந்தது...
பாடசாலைகள் ஊரின் பொது கோவில் மண்டபம், சத்திரம் போன்ற இடங்களில் அதிக அளவில் இருந்தது...
ஓலை சுவடிகள், மற்றும் பொம்மலாட்டம் மூலமும் கல்வி மற்றும் வரலாற்று நிகழ்வுகளை சொன்னார்கள்..
மேலும் படிக்க முடியாத உழவர்களுக்கு இரவில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மூலம் வரலாற்றை கொண்டு சேர்த்தனர்.. இவர்களை நாடக கலைஞர்கள், தெருக்கூத்தாடிகள்,மேடை கலைஞர்கள் என்று பல்வேறு பிரிவுகளில் அழைக்கப்பட்டார்கள்...
ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.