🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-5

கம்பளத்தார் திருமண நிகழ்வுகள் 5 நாட்கள்  படுவிமர்சியாக நடைபெறும். இறுதி சடங்குகள் 3 நாட்களில் முடிக்கப்பட்டு நடுகல் நட்டி அவரின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து, தெய்வ நிலையை அடைய வைப்பார்கள்..

இவ்வாறு தெய்வீக நிலையை அடைந்தவர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது வழிபாடு நடத்துவது நாயக்கர் மக்களின் பழக்கம்..

ஆண்டுதோறும் பொங்கல், சித்திரை விழா, ஆடிப்பெருக்கு , புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் வழிபாடுகள், கார்த்திகை தீப வழிபாடு என்று வருடத்தில் சீரான கால இடைவெளியில் தொய்வில்லாமல் பொது விழாக்கள் நடைபெறும்.

15 நாட்கள் தொடச்சியாக வழிபாடு செய்து வர வேண்டிய சிறப்பு விழாக்கள் நாயக்கர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவையே.

சிறு தெய்வங்கள் மற்றும் முன்னோர்களுக்கு கிடா வெட்டி பலி கொடுத்து வழிபாடு செய்வது இங்குள்ள தமிழ் குடிகளின் பழமையான பழக்க வழக்கங்களில் ஒன்று..

உதாரணமாக கருப்பசாமி, சுடலை மாடசாமி,  முனீஸ்வரர்,பாண்டி முனி, தம்பிக்கலை அய்யன், அய்யனார், போன்றவை ஊரின்  காவல் தெய்வங்களாகும், இவை அனைத்தும் ஊர் நாட்டமை, பட்டக்காரர்,ஊர் தலைவர், ஊர் காவலர் மற்றும் அந்த கிராமத்தை காக்க, இம்மண்ணுக்காக வீர மரணம் அடைந்த நபர்களின் நினைவாக வழிபாடு செய்யக்கூடியவை ஆகும். மாரியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களும் இவ்வகையில் வழிபாடு செய்யப்படக் கூடியவையாகும்.

மேலும் கர்ப்பிணி பெண் ஒருவர் கிராமத்தில் இறந்தால்,அவரின் நினைவாக, ஊர் எல்லையில் சுமை தாங்கி கல்லும் நடப்பட்டது..

மேலும் மாதையன், மாதேஸ்வரர் போன்ற கோவில்களில், கால்நடைகளின் மண் சிலைகள் வைக்கப்பட்டு மாட்டுப் பொங்கல் அன்று வழிபாடு செய்யப்படும், இவ்வாறு வழிபாடு செய்தால் கால்நடைகளுக்கு நோய் தாக்கும் இருக்காது என நம்பப்படுகிறது.. இவை சைவ கோவில்கள் ஆகும் . இங்கு பெரும்பாலும் உயிர் பலிகள் கொடுக்கப் படுவதில்லை.

மேலும் ஆதி தமிழ்குடிகளின் பழக்கத்தில் இல்லாத, காலத்தால் மறைந்து போன நாகர்கள் வழிபாடு இன்றளவும் கம்பளத்து நாயக்கர் இனத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 358 சாதிகளில் கம்பளத்து நாயக்கர் இனத்தில் மட்டுமே உள்ளது..

திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை துவங்கும் முன்னர், நாகர்களை வழிபட்டு விட்டு, ஒரு சேவல் மற்றும் கோழியை பலி கொடுத்து பின்னர் அதை சமைத்து சம்பிரதாயத்திற்கு உண்ண கொடுத்து பின்னரே இல்லற வாழ்க்கை துவங்கும்.

மேலும் இன்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி சேவலை பலியிடும் பழக்கம் வேட்டை சமூக மக்கள் அனைவரிடத்திலும் உள்ளது.

இதுவும் நாகர்களின் தொன்மையான வழிபாடு முறையே..

நாயக்கர் மக்கள் ஜோதிடம் ,சாஸ்திரம் போன்றவற்றில் பிராமணர்களுக்கு இணையாக, முறையாக செய்யக்கூடியவர்கள், எனவே இவர்களின் குடும்ப விசேஷங்களில் பிராமணர்களை அழைப்பதில்லை.

அதனால் நாயக்கர் மக்கள் வளர்பிறை ஞாயிறன்று, அதிகாலையில் சூரிய உதயத்தின்பொழுது சூரியனை வழிபடும் பழக்கம் என்று தங்களின் முன்னோர்களான நாகர்களையே வழிபடுகிறார்கள். அப்போது பாம்பு புற்றில் பூஜை பொருட்கள், மற்றும் சர்க்கரையுடன் கலந்த தானியங்களை சிறு எறும்புகளுக்கு படையலிட்டு , சிகப்பு மற்றும் மஞ்சள் பொடிகளை சம்பிரதாயத்திற்கு தெளித்து விட்டு, நன்றாக கூவக்கூடிய சேவலை பலி கொடுத்து, அந்த சேவலின் தலையினை புற்றினுள் முன்னோர்களுக்கு,நாகர்களுக்கே கொடுத்து விடுவார்கள்.

மேலும் மாதம் ஒருமுறை மட்டுமே அசைவ உணவுகளை உண்ணக்கூடிய பழக்கம் இருந்தது...

ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved