🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-6

துவாரகா யுகம் முடிந்து கலியுகம் துவங்கும்போது ஏற்பட்ட வாழ்வியல் முறையை இந்த கதை உங்களுக்கு விளக்கமாக புரியவைக்கும்...

கண்ணன் என்பவர், முருகன் என்பவரிடமிருந்து ஒரு விளை நிலத்தை விலைக்கு வாங்கி சீர்படுத்தும்போது ஒரு தங்க புதையல் கிடைத்தது…

இதை கண்ணன் எடுத்து சென்று முருகனிடமே கொடுத்தார், முருகா இது நான் விலைக்கு வாங்கிய உன்னுடைய நிலத்தில் கிடைத்தது, இது உன் மூதாதையர்கள் உனக்காக சேர்த்து வைத்த சொத்து இதை நீயே வைத்துக்கொள் என்கிறார்,

உடனே முருகன், இது நீ என்னிடம் வாங்கிய நிலத்தில் கிடைத்தாலும் , கண்ணா என்று நீ என்னிடம் விலை கொடுத்து வாங்கிவிட்டாயோ இனி இது உனக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்கிறார்..

துவாரகா யுகம்  என்பதால் மிக நேர்மையான முறையில் நடந்து கொள்கிறார்கள்...

இவர்களால் பிரச்சினையை தீர்க்க முடியாத காரணமாக மன்னரிடம் முறையிட்டார்கள், மன்னரும் நடந்தவையே கேட்டுவிட்டு தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே அரச குருவை அழைத்து ஆலோசனை செய்கிறார். அவர் சொன்னபடி ஒரு மாதத்திற்கு பிறகு கலியுகம் பிறக்க உள்ளது.. எனவே இதற்கான தீர்ப்பு கலியுகம் தொடங்கியதும் வழங்கப்படும், அதுவரை இந்த புதையல் அரசிடம் பாதுகாப்பாக இருக்கும் சென்று வாருங்கள் என அனுப்பி வைத்தார்..

ஒரு மாதம் கழித்து கலியுகம் துவங்கியதும் அரசவைக்கு வரவழைக்கப்பட்டனர். வரும்பொழுதே இருவரும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டே வந்தார்கள்...

உடனே மன்னர் தற்போது உங்கள் முடிவென்ன என்று கேட்டது மட்டும் தான் தாமதம்,  இருவருமே தனக்குத் தான் சொந்தம் என்கிறார்கள், நிலத்தினை விற்பனை செய்தாலும், புதையல் என் மூதாதையர்கள் எனக்காக சேர்த்தது மேலும் நான் நிலத்தை தான் கண்ணனுக்கு கொடுத்தேன் புதையலை அல்ல என்கிறார்...

கண்ணனோ நான் எப்பொழுது நிலத்தினை வாங்கி விட்டேனோ அன்று முதல் அதில் இருக்கும் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தம், எனவே உடனடியாக அதை என்னிடம் தர வேண்டும், நான் சொல்லவில்லை என்றால் புதையல் இருந்ததே யாருக்கும் தெரியாது என்றார்..

மன்னர் இதை கவனித்து விட்டு சொன்னார், பூமிக்கு கீழே உள்ள அனைத்தும் அரசாங்கத்திற்கே சொந்தம், எனவே உதைப்பதுக்கு முன்னர் ஓடி விடுங்கள் என்றார்..

இதை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் பேசாமல் நாம் இருவருமே சமபங்காக பிரித்துக் கொண்டு இருந்தால், இப்படி மொத்தமும் போயிருக்குமா என புலப்பியபடி சென்றார்கள்...

இதே நிலை தான் இன்று ஜனநாயக நாட்டிலும் நடக்கிறது...

மக்களுக்காக அரசாங்கம் செயல்படவில்லை...அரசியல்வாதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் வாழ்வதற்காக என்று நமக்கு தோன்றும்..

அப்படியானால் கலியுகத்தில் நேர்மையானவர்கள் இல்லையா என்றால் அப்படி கிடையாது..

நாயக்கர்கள் கற்ற மற்றும் இன்று வரை பிராமணர்கள் போதிக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரத்தில் சனியின் நட்சத்திரங்கள், வீடுகள் என்று 3 நட்சத்திரம் உள்ளது, மற்றும் சனியின் ஆதிக்கம் உள்ள ஜாதகர் இம்மண்ணுக்காக தங்கள் உயிரையும் தருவார்கள், இவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது..

இது நம் மாமன்னர் திருமலை நாயக்கர் ஜாதகம் துவங்கி நேரு, மோடி அவர்கள் வரை பொருந்தும்..

இவர்கள் நினைத்ததை சாதிக்கும் போது நம்மால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியுமே தவிர,  எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது..

இதை வைத்தே போர் புரிய வேண்டுமா? சமாதானம் பேச வேண்டுமா? என்று பல விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது..

மன்னர் காலத்தில் ஒருவரின் பிறக்கும் காலத்தை வைத்து , அவர் அச்சுறுத்தலாக எதிர்காலத்தில் வரக்கூடியவர் என்பதை அண்டை நாட்டு மன்னர் அறிந்து கொண்டு அவரை சிறு வயதிலேயே படுகொலை செய்ய முயற்சி செய்வார்கள்..

இது பகவான் கிருஷ்ணர் நம்முடைய யாதவ குலத்தில் வளர்ந்து ,நம் பெண்ணை மணமுடிக்க இந்த சாஸ்திர கணக்குகளை கம்சன் உணர்ந்திருந்தாலே ஏழு பேரை கொன்ற அவன், எட்டாவது நபரான கிருஷ்ணனின் கைகளால் உயிரை விட்டார்..

எனவே தான் நம்மை எதிர்பவர் எல்லாம் எதிரி கிடையாது, நம்மை வெல்லக் கூடிய ஆற்றல் இருந்தால் மட்டுமே அவர் நமக்கு சரியான போட்டியாளர் என்று நாயக்கர் வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள் தெளிவாக காட்டுகிறது..

ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved