வடக்கே இருந்து வீசிய வசந்த காற்று! - பகுதி-7
நாயக்கர் ஆட்சி காலத்தில் தென்னிந்திய முழுவதும் ஒரே பகுதியாகவே இருந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்டு ஆட்சி நிர்வாகத்தை எளிமை ஆக்கினார்கள்.
அருந்ததியர், ஒக்கலிக்க கவுடர், அனுப்பக் கவுண்டர், போயர், மைசூர் உடையார், குஜராத் சவுராஸ்டிரா மக்கள், வன்னியர் பிரிவில் உள்ள பள்ளி என்ற ஒரிசா இனக்குழுக்கள், 24 மனை வைசியர், ரெட்டியார் என்று பல இனக் குழுக்கள் இன்றுள்ள தமிழக பகுதியில் வடக்கிருந்து தெற்கு, தென்மேற்கு என்று பல பகுதிகளில் குடிபெயர்ந்தார்கள்..
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் வேட்டை இன மக்கள் வேளாண் குடி மக்களாகவும்,கால்நடைகள் வளர்ப்பு மக்களாகவும் குடி அமர்த்தப்பட்டார்கள்..
குறிப்பாக இன்றுள்ள கோனார் இன மக்கள் தேனீ மாவட்டத்தை ஒட்டிய மலை அடிவாரம் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை வளர்ப்பதை மட்டும் பிரதானமாக கொண்டிருந்தனர்..
மலை தொடர் வழியாக வந்து இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை கூட்டம் கூட்டமாக கவர்ந்து சென்றனர் மலைக்கு அடுத்த பகுதியில் இருந்த கேரள தேச கயவர்கள். இவர்கள் கர்நாடக எல்லை வரை பரவி இருந்தனர்...
இவர்களிடருந்து கால்நடைகளை பாதுகாக்கவே தஞ்சை பகுதியில் இருந்து பிரமலைக் கள்ளர் மக்கள் விஜய நகர ஆட்சி காலத்தில் தேனீ மாவட்ட பகுதியில் குடி அமர்த்தப்பட்டார்கள்..
இரவு நேர காவல்காரர்களாகவும் பகலில் விவசாயமும் செய்தனர்..கோனார் இன மக்கள் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதியில் குடி பெயர்ந்தனர்.. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அனுப்ப கவுண்டர் இன மக்கள் குடி அமர்த்தப்பட்டனர்...
இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் கால்நடைகளில் சில ஆயிரம் ஆடு மாடுகள் வரை ஓட்டி சென்று விடுவார்கள்..நாம் சென்று மீட்கும் போது பாதிக்கு மேல் கொன்று தின்று விடுவார்கள்..
மேலும் மலை பகுதியில் நாம் பின் தொடர்ந்தால் நெருப்பை கொழுத்தி போட்டு இங்கிருந்து பின்னால் துரத்தி செல்வோரை அவர்கள் எளிதில் தடுப்பார்கள், தீ மூட்டி விட்டால் ஒரு வாரம் கூட காடே பற்றி எறியும்.. எனவே அவர்கள் கால்நடைகளை கவர்ந்து செல்லும் நுழைவு மலை உச்சியில் பெரிய கற்களை கள்ளர் இன காவலர்கள் அடுக்கி வைத்திருந்தனர், மேலே கயவர்கள் ஏறும் போதே கற்களை வீசி படுகொலை செய்தனர்..
தேய்பிறை தொடங்கி அமாவாசை வரைக்கும் உட்பட்ட 15 நாட்களில் ஒரு நாளிலேயே கொள்ளையர்களும், கயவர்களும் நம் எல்லைக்குள் நுழைத்து கிடைப்பதை எல்லாம் எடுத்து செல்ல முயல்வார்கள், எதாவது ஒரு திருடன் நம் காவர்களிடம் பிடிபட்டால் அவனை வைத்தே அவனின் ஒட்டுமொத்த கூட்டமும் விஜய நகர வீரர்களால் தாக்கி அழிக்கப்படுவார்கள்..
எனவே காயம் பட்ட திருடனை அவர்களுடன் சேர்த்த திருடர் கூட்டமே அடையாளம் தெரியாமல் இருக்க காயம்பட்ட திருடனின் தலையை வெட்டி எடுத்து செல்வார்கள்...
மேலும் நாடார் இன மக்களை தாழ்த்தப்பட்ட மக்களாக கருதிய போது, விஜய நகர அரசு இவர்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் இவர்களை தாழ்த்தப்பட்ட மக்களாக கருத முடியாது என்று தமிழகத்தில் பல பகுதிகளில் கள் இறக்கவும் பனை ஓலை குடில்கள் அமைக்கவும் பயன்படுத்தி கொண்டனர்...
ஆசிரியர்: திரு.அன்பரசு துரைசாமி, ஈரோடு.
மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் இவர்களை கொடு
மைக்கு ஆளாக்கியதால் பெரும் பாலான மக்கள் கொங்கு நாட்டிலும், தற்போது உள்ள வட தமிழக பகுதியில் குடியேறினார்...
ஆனால் இந்த மக்களை கோவிலில் நுழைய விட்டால் உங்களின் சத்தியத்தை இழந்து விடுவீர்கள் என திருவிதாங்கூர் சமஸ்தானம் சொன்னதால், இவர்களை கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டது..இதைத் தவிர்த்து இவர்களை இடைநிலை சமூக மக்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர்...
மதுரையில் சவுராஸ்டிரா மக்களை குடியமர்த்தி அவர்களை வைத்து நெசவு தொழில் செய்து கொண்டது விஜய நகர அரசு...
இதே போல் கொங்கு மண்டலத்தில் தேவாங்கர் என்கிற கன்னட ஜேடர் இன மக்களை பட்டு மற்றும் நெசவு தொழில் புரிய குடி அமர்த்தியது விஜயநகர பேரரசு காலத்தில் தான்..
மேலும் 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள், கலாச்சார சம்பந்தப்பட்ட விஷயங்கள் டெல்லி சுல்தான் படையால் தடம் தெரியாமல் அழித்து போனது.. இதனால் தான் இன்று உள்ள தமிழகத்தில் விஜய நகர அரசின் சுவடுகள் அனைத்து இடங்களிலும் முதன்மை பெற்று விளங்குகிறது...