கொங்கு மண்டலத்தில் - நம்ம வீட்டுக்கல்யாணம்.

கோவை மாவட்டம்,ஈச்சனாரியில், என்னுடைய அருமை தம்பி கடந்த 40 ஆண்டு காலமாக என்னோடு தொடர்ந்து கட்சிப்பணியிலும், நமது சமுதாயப் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டு, தொடர்ந்து பாடுபட்டு வரும் ஈச்சனாரி திரு.ஆர்.காளிமுத்து-திருமதி.பேபி ஆகியோரது அன்பு மகள் செல்வி.நந்தினி (எ) மோகனசுந்தரிக்கும் எனது சகோதரியும், ஈச்சனாரி எம்.காளிமுத்து -திருமதி.ராஜேஸ்வரி ஆகியோரது அன்பு மகன் செல்வன். சரவணகுமார் ஆகியோரது திருமணம் 31. 8.2020.அன்று ஈச்சனாரியில் மிக சிறப்பாக ஈச்சனாரி ஊர் நாயக்கர் தலைமையில் திரு தங்கவேல் அவர்கள் முன்னின்று கம்பளத்தார் சமுதாய சம்பிரதாயப்படி நடத்திக் கொடுத்தார். இல்வாழ்க்கையைத் துவங்கும் அன்புச்செல்வங்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்,