ஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டையின் இராஜகம்பள நாயக்கர்களின் பாரம்பரிய வழக்கப்படி ஸ்ரீ திம்மராய பெருமாள் திருக்கோவிலில் எர்ர கொல்லவார் வகையைச் சார்ந்த கெவுடுலு குல திரு.மணி (எ) ஆர்.வெங்கடாசலம் அவர்களுக்கு "ஏழுநாட்டு பட்டக்காரராக" பட்டம் சூட்டும் விழா கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. மேளதாளத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பாத்தியப்பட்ட கிராமத்தைச்சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.