🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரை சுற்றி வளைக்கும் பிரச்சினைகள்! மீளுமா?வீழுமா?

தென்காசி  மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடியாக செயல்பட்டு வருகிறது. இங்கு வலசை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது அங்கிருந்து வாக்குச்சாவடியை மாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது. பல்வேறு சமூகத்தினர் வசித்துவரும் வலசை கிராமத்தில் தொடர்ந்து இருதரப்பினருக்கிடையே மோதல் இருந்துவருகிறது.  இப்பொழுது மாவட்ட நிர்வாகம் வாக்குச்சாவடியாக மாற்றவுள்ள கட்டிடம் வேறு சமூகத்தினர் வசிக்குமிடத்தில் உள்ளது. இதனால் வாக்களர்கள் அவர்கள் குடியிருப்பு வழியாக சென்றுதான் வாக்களிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்பவர்கள் தங்கள் குடியிருப்பு வழியாக வரும் வாக்காளர்களை குறிவைத்து சாதிய மோதலை துண்டி பிசிஆர் வழக்கில் சேர்ப்பார்கள் என்ற அச்சம் அங்குள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். வன்கொடுமை தடுப்புச்சட்டம் பழிவாங்கும் நோக்கோடு பயன்படுத்தப்பட்டால் தங்களின் அமைதியான வாழ்க்கையும், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்று அச்சத்தை தெரிவிக்கின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் வாக்குச்சாவடியை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று  தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 


ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் கிராமத்தில் கம்பளத்தார்கள் 300 ஆண்டுகாலமாக வழிபட்டு வந்த மாலாகோவில், கரூர் மாவட்டம், வெங்கக்கல்பட்டியிலுள்ள பொம்மதேவர் கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்களை எதிர்த்து விடுதலைகளம் கட்சி ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது.  அதேபோல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் கம்பளத்தார் சமுதாயத்தினரை தாக்கியதோடு, வன்கொடுமை வழக்கும் பதியப்பட்டது. 

இப்படி தமிழகம் முழுவதும் கம்பளத்தார் மீதான தாக்குதல் உக்கிரமாகி வரும் நிலையில், இதுகுறித்து தமிழகமெங்குமுள்ள சமுதாயத்தினரை ஒன்றுதிரட்டி, எதிர்கால திட்டங்கள், பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்க தலைவர்களாக காட்டிக்கொள்பவர்கள் எதுவும் நடக்காததுபோல் கடந்து செல்வதும், படித்த இளைஞர்களோ, செல்வந்தர்களோ சமுதாயம் என்றாலே விலகி ஓடுவதும் கம்பளத்தார் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved