🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்களின் மனங்களை வென்றார் முதல்வர்! கொ.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை, தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் ஆகிய கோரிக்கைகளை பல காட்டங்களில் தொடர்ந்து தமிழக அரசை விடுதலைக்களம் கட்சி வலியுறுத்து வருவதாகவும் அதை தற்போதைய தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளதாகவும் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....


விடுதலைக்களம் அமைப்பு தொடங்கப்பட்ட  கால்நூற்றுகாலமாக சென்னையில் மாவீரன் கட்டபொம்மனுக்கு முழுவுருவ சிலை வேண்டும் என்ற தமிழகத்தில் வாழும் லட்சோப லட்சம் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்துள்ளது.  இக்கோரிக்கை குறித்து அன்றைய தமிழக முதல்வர்களாக இருந்த கலைஞர்.மு.கருணாநிதி, செல்வி.ஜெ.ஜெயலலிதா,  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் ஆட்சிகாலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து விடுதலைக்களம் வலியுறுத்தி வந்துள்ளது.  கடந்த சட்டமன்றத்தேர்தலின் பொழுதும் கூட அத்தியூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்திருந்தது. தேர்தல் முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே மாவீரனுக்கு சிலை அமைக்கும் அறிவிப்பினை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அறிக்கையின் மூலம் விடுதலைக்களம் அரசை  வலியுறுத்தியிருந்தது.  இது சம்மந்தமாக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் மின்சாரத்துறை அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்களை விடுதலைக்களம் நிறுவன தலைவர் கே.நாகராஜன் மற்றும் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி ஆகியோர் கடந்த மாதம் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தோம்.  மாண்புமிகு அமைச்சர் இக்கோரிக்கையை உடனடியாக தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று தனிக்கவனம் செலுத்தி விரைவில் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.  மாண்புமிகு அமைச்சர் வாக்குறுதியளித்தபடி இன்று ( 07.09.2021) நடைபெற்ற மானியக்கோரிக்கையின் பொழுது நிறைவேற்றியிருப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,  மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும், பேருதவி புரிந்த அண்ணன் என்.மணிகண்டன் ஆகியோருக்கும் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேபோல் இரட்டிப்பு மகிழ்ச்சியை கம்பளத்தாருக்கு வாரிவழங்கும் வகையில் தளி எத்திலப்ப நாயக்கருக்கு  2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணையிட்ட முதல்வருக்கு மீண்டும் மீண்டும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

இக்கோரிக்கையை பல்வேறு சமயங்களில் அரசிடம் தொடர்ந்து குரல்கொடுத்து வந்த முன்னாள்,  இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,  தெலுங்கு சமுதாய அமைப்புகள்,  தலைவர்கள், தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், சமுதாய உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண், 

கொ.நாகராஜன், 

விடுதலைக்களம் கட்சி, இராசிபுரம்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved