🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமானிய விவசாயி வீட்டுப்பெண்ணை மருத்துவராகியதற்கு காரணம் இது தான்!- மருத்துவர்-யோகேஸ்வரி பேச்சு.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை எதிர்கொள்ள தொட்டிய நாயக்கர்கள் சார்பில் வழக்காடு நிதி அளித்தவர்களுக்கு காணொளி மூலம் பாராட்டுக்கூட்டம்  நடைபெற்றது. அப்பொழுது பேசிய மருத்துவர் திருமதி. யோகேஸ்வரி அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களைப்போன்ற சாமானிய விவசாயக்குடும்பத்தில் பிறந்த பெண்களை மருத்துவராக்கியது. நானும் எனது கணவரும் மருத்துவர் ஆகியது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் மருத்துவர்கள் நம் சமுதாயத்தில் உருவாகிட இடஒதுக்கீடு மிக அவசியம். இடஒதுக்கீட்டின் பலன் எல்லா சமுதாயங்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். யாருடைய வாய்ப்பையும் தட்டிப்பறிப்பதுபோல் இடஒதுக்கீடு இருந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved