🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சுதந்திர தின கிராமசபைகளில் ஓ.பி.சி மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி தீர்மானம்- மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மனு.

வரும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி பிரிவையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட்-15 -இல் நடைபெறவுள்ள சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளோம் என்பதை  மாவட்ட ஆட்சியருக்கு சட்டப்படி அறிவிப்பு செய்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் மனு கொடுத்துள்ளது. 

மேலும் அம்மனுவில், ஓ.பி.சி.மக்கள்  கணக்கெடுப்பு கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் 80 கோடி ஓபிசி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, பல படித்த பிள்ளைகள் தற்கொலை செய்து மடிந்து வருகின்றனர். நாங்கள் பிறந்தது பசியில் சாவதற்கா? எங்கள் உரிமை, எங்கள் பங்கு, எங்கள் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க ஓபிசி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும். 

ஆடு,மாடு, கோழி பன்றி, எருமை, நாய்களை கூட கணக்கெடுக்கின்ற அரசு, ஓபிசி மக்களை மட்டும் கணக்கெடுப்பு நடத்தமறுப்பதால், நாங்களும் மிருகங்கள்தான் எங்களையும் கணக்கெடுப்பில் சேருங்கள் என்று வலியுறுத்தியுள்ளோம். உலக வரலாற்றில் ஜனநாயக நாட்டில் வேறெங்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால் இந்தியாவில்தான் 60% மக்களுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்படுகிறது. இது முடிவுக்கு வரவேண்டும். இடஒதுக்கீடு சலுகையல்ல. அது எங்கள் பங்கு. 2021ல் கணக்கெடுப்பில் ஓபிசி கணக்கெடுப்பு நடத்தவில்லையென்றால் 80 கோடி மக்கள் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறோம். அரசுக்கு ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதால் கூடுதல் செலவோ வேறு சிரமங்களோ ஏற்படபோவதில்லை. மாறாக கோடான கோடி மதிப்பிலான புள்ளிவிபரங்கள் கிடைக்கும். ஓபிசி மக்களுக்கு முறையான திட்டமிட்டு அவர்களை முழுமையாக வளர்ச்சியடைய செய்யலாம். எனவே கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளோம். 

1.ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பை கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் அம்மக்களுக்கு உரிய கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை எனவே அவர்களின் மேம்பாட்டிற்கு உரிய திட்டமிட வரும் 2021 காகிதமில்லா கணக்கெடுப்பில் ஓபிசி புள்ளிவிபரமும் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி தீர்மானம்.

2.ஓபிசி மக்களுக்கு வழங்கியுள்ள 27% இடஒதுக்கீடு 12% சதவீதம்கூட பூர்த்தியாகாத நிலையில்  ஓபிசி கிரிமிலேயர் வருமான அளவீடுகளில் அரசு/பொது/தனியார்துறையில் பணிசெய்யும் ஓபிசி மக்களில் மாதசம்பளத்தை சேர்க்கவும், விவசாய நில அளவிலும் மாற்றங்களை கொண்டு வந்து கோடான கோடி ஓபிசி பணியாளர்கள் விவசாயிகளின் உரிமைகளை பறிக்க சர்மா குழு வழங்கியுள்ள பரிந்துரையை ஏற்ககூடாது, கிரிமி லேயரை முழுமையாக நீக்க தீர்மானம்.

3.மத்திய கல்வி நிறுவன சட்டம் 2006யை திருத்தி எல்லா கல்வி நிறுவனத்திலும் ஓபிசிக்கு இடஒதுக்கீடும், மாநில இடங்களில் மாநில இடஒதுக்கீடு விகிதப்படி இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய தீர்மானம்.

4.2015ல் தேசிய பிசி ஆணைய பரிந்துரைப்படி ஓபிசி உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த தீர்மானம்.

5.பெண்களுக்கு எல்லா நிறுவனங்களிலும் 50% கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க தீர்மானம்.

6.மத்திய/மாநில எல்லா வளர்ச்சி திட்டங்களிலும் ஓபிசிக்கு தனி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்.

7.அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க தீர்மானம்.

போன்ற கொரிக்கைகள் இம்மனுவில் இடம்பெற்றுள்ளது.

இம்மனுவை, இன்று காலை நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் (ஆட்சியர் இல்லாதகாரணத்தால்) அவரின் நேர்முக உதவியாளரிடம் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் வழங்கினார். அவருடன் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் திரு.மு. பழனிசாமி, திரு.சின்னுசாமி, திரு.பொ.மணி, AIOCC & அனைத்து ஓபிசி/டி.என்.டி சமூகங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved