🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி போராட்டத்தில் களமிறங்கிய கம்பளத்தார் அமைப்புகள்.

இன்று காலை 10 மணிக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே சமூகநீதி ஆர்ப்பாட்டம் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு மற்றும் விடுதலைக்களம், தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகள் சார்பாக விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சேகர், தேசிய செட்டியார்கள் பேரவை தங்கராஜ், தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் பொருளாளர் சின்னுசாமி தலைமை நிலைய செயலாளர் மணி, அஹிம்சா சோசலிஸ்ட் கட்சி காந்தியவாதி ரமேஷ், தமிழ்நாடு நாயுடு நாயக்கர் பேரவை மாநில தலைவர் பிரேம்குமார், வாணியர் இளைஞர் நற்பணி மன்ற மாவட்டத்து தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். விடுதலைக்களம் மாநில துணைத்தலைவர் பாலு, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன், மேற்கு மாவட்ட தலைவர் செங்கோட்டுவேல் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் பூவரசி ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சரவணகுமார், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையை சார்ந்த திருச்செங்கோடு சரவணன், ரங்கசாமி, பூச்சிநாயக்கம்பட்டி சின்னுசாமி, மின்னாம்பள்ளி வெங்கடாச்சலம், காரிப்பாப்பனூர் மாதையன், நாமக்கல் ஆசிரியர் சண்முகம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.


சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காலை 11 மணிக்கு அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர் திரு.இராதகிருஷ்ணன் தலைமையில் திரு.இராமராஜ்,திரு.முருகன், திரு.தங்கம், திரு.இராஜா, திரு.சரவணன், திரு.சுப்பிரமணியம், திரு.குருசங்கர், திரு.இராமர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இதேகோரிக்கைகாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் தலைமையில் சமுதாயத்தினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதுகுறித்து பேசிய திரு.பவுல்ராஜ் அவர்கள் மாவீரன் கட்டபொம்மன், தளி எத்திலப்ப நாயக்கர், விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரை சுதந்திரத்திற்காக பலிகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களை செய்த சமூகங்களுக்கு உரியநீதி சுதந்திர இந்தியாவில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதிகாரத்தில் உரிய இடத்தை பெறுவதே  நமது முன்னேர்களின் தியாகத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்றார்.

இதேபோல் மதுரை, தேனி,விருதுநகர்,தூத்துக்குடி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பலைடங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved