🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரனின் 221-வது வீரவணக்கநாளில் இடஒதுக்கீடு கோரி வீரமுழக்கமிட்ட கம்பளத்தார்கள்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள் பல்வேறு சமுதாய அமைப்புகளாலும், சமுதாய மக்களாலும் தமிழகமெங்கும் படுவிமர்சையாக அனுசரிக்கப்பட்டது. ஏற்கனவே அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு, விடுதலைக்களம், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல் உள்ளிட்ட அமைப்புகள் வீரவணக்கநாளை ஓ.பி.சி மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் வீரமுழக்கநாளாக அனுசரிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 


அதனடிப்படையில், நாமக்கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவீரன் கட்டபொம்மனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வீரமுழக்கமிடப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மிகச்சிறந்த முறையில் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜனும், அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களும்  செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கற்றறிந்தவர்களும், அரசு மற்றும் தனியார்துறைகளில் மிகப்பெரிய பதவிகளில் உள்ளவர்களையும், தொழிலதிபர்களையும் சமுதாயத்திற்கு உருவாக்கித்தந்துள்ள நாமக்கல் மாவட்டத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அவசியம், தேவை குறித்து நன்கு அறிந்தவர்கள் என்றால் மிகையல்ல. இது அனைத்து பகுதிமக்களுக்கும் கிட்டவேண்டும், சமுதாயம் பலன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் சென்னையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் மாவீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து எளிய முறையில் திரு.இராஜா அவர்கள் விளக்கிப்பேசினார். இதனைத்தொடர்ந்து இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வீரமுழக்கமிடப்பட்டது.


இது தவிர மாநிலம் முழுவதும் ஓபிசி பிரிவில் இடம்பெற்றுள்ள  முக்குலத்தோர், முத்தரையர்,  வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கோரி பதாகைகளை ஏந்தியபடி இடஒதுக்கீடு வேண்டி வீரமுழக்கமிட்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved