🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிப்ரவரி திங்கள் திருப்பூரில் தொட்டிய நாயக்கர் திருப்புமுனை மாநாடு! விடுதலைக்களம் அறிவிப்பு.

விடுதலைக்களம் அமைப்பின் மேற்கு மண்டல ஆலோசனைக்கூட்டம் நேற்று (20.12.2020) ஞாயிற்றுக்கிழமை, நாமக்கல், சிந்துமண்டபம், "கோல்டன் ரெசிடென்ஸி"யில் நடைபெற்றது. விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சேலம்,கோவை,ஈரோடு, திருப்பூர்,நாமக்கல், கரூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


1.திருப்பூர் மாநகரில் 2021-பிப்ரவரி மாதம் தொட்டியநாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநாடு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

2 ஓய்வுபெற்ற நீதியரசர்.திரு.குலசேகரன் தலைமையில் சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க ஆணையம் அமைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலைக்களம் வரவேற்கிறது.

3. இந்த ஆணையம் காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு வித்திக்க வேண்டும் என்றும், ஆணையம் உடனடியாகப்பணிகளைத் துவங்க ஆனையத்திற்குத்தேவையான உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என விடுதலைக்களம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

4.தமிழகத்தில் DNT சீர்மரபினர் மக்களுக்கு DNC/DNT என இரட்டைச்சான்றிதழ் வழங்கும் முறையை ஒழித்து பிற மாநிலங்கள் போல் DNT என்று ஒற்றைச்சான்றிதழ் வழங்கவேண்டும் என தமிழக அரசைக்கேட்டுக்கொள்கிறது.

5.DNT சான்றிதழ் பற்றிய புரிதல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இல்லாத காரணத்தால், சான்றிதழ் பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது. எனவே DNT பிரிவிலுள்ள அனைவருக்கும் விண்ணப்பித்தவுடன் சான்றிதழ் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலைக்களம் கேட்டுக்கொள்கிறது.   

முன்னதாக இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் திரு.பாலு அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநில நிதித்துறை செயலாளர் மலைவேப்பங்குட்டை திரு.ஜெகனாதன் உட்பட 300-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved