🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரே சாதி இரட்டை சான்றிதழ்! - அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் தொட்டியநாயக்கர் சமுதாயம்.

தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபின பழங்குடிகளுக்கு DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை 1979-இல் எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசு இரத்து செய்தது. 2014 முதல் DNT சமுதாய மக்கள் ஐந்து வருடங்களாக கடும் போராட்டம் நடத்தியதின் விளைவாக , 2019-இல் அரசாணை எண் 26/2019 மூலம் தமிழக அரசு 1979-இல் போடப்பட்ட அரசாணையை இரத்து செய்து, சீர்மரபின பழங்குடி மக்களுக்கு DNC சான்றிதழ்களை வழங்கிவருகிறது. இந்த அரசாணையின் மூலம் DNC என்று மாநில அரசுக்கு ஒரு சாதி சான்றிதலும், DNT என்று மத்திய அரசுக்கு ஒரு சான்றிதழையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.


இந்தியாவிலேயே எங்கும் இல்லாத, கேட்டிராத வகையில் ஒரே சாதிக்கு இரட்டை சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் அரசாணை எண் 26/2019 ஐ ரத்து செய்து, அனைத்து சாதிகளுக்கும் DNT என்று ஒரே சான்றிதழ் வழங்க வேண்டுமென பலமுறை கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் மத்திய , மாநில அரசுகள் செவி சாய்க்கத்தைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசாணை எண் 26/2019 நகல் எரிப்பு போராட்டத்திற்கு 68 சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபினர் நலச்சங்கம் நேற்று அழைப்பு விடுத்திருந்தது.


இதில் விடுதலைக்களம், சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கம் உள்ளிட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும், கள்ளர்,முத்தரையர்,போயர்,வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர் உள்ளிட்ட சீர்மரபின பழங்குடி இன அமைப்பினரும் தமிழகம் முழுவதும் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved